Wednesday, July 4, 2012

யாதுமாகி நின்றாய் -காளி -Yathumaki Ninraay kali

காளிப் பாட்டு


     1.யாதுமாகி நின்றாய் -காளி
     எங்கும் நீ நிறைந்தாய் 
தீது நன்மையெல்லாம்--காளி 
     தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்து மானாய் --காளி 
     பொறிக ளைந்து மானாய் 
போதமாகி  நின்றாய்-காளி 
     பொறியை விஞ்சி நின்றாய்.

2.-இன்பமாகிவிட்டாய்-காளி 
     என்னுள்ளே புகுந்தாய் 
பின்பு நின்னையல்லால்-காளி 
     பிறிது நானுமுண்டோ?
அன்பளித்துவிட்டாய் -காளி 
     ஆண்மை தந்துவிட்டாய்
துன்ப நீக்கிவிட்டா ய் - காளி 
தொல்லை போக்கிவிட்டாய் 

6 comments:

  1. Thanks for the viewer from COIMBATORE

    ReplyDelete
  2. Thanks for the viewer from Coimbatore for visiting this blog two times today

    ReplyDelete
  3. A visitor from Scarborough,Ontario viewed this post today

    ReplyDelete
  4. Does para 1 indicate that Bharathi beleived in karma or papa punya?

    ReplyDelete