பல்லவி
1 .வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள்
வீணை செய்யும் ஒலியி லிருப்பாள்;
கொள்ளை யின்பங்குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
அனுபல்லவி
1.உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின்உள்நின் றொளிர்வாள்
கள்ளமற்றமுனிவர்கள்கூறும்
கருணைவாசகத் துட்பொருளாவாள் (வெள்ளைத்)
சரணம்1
மாதர்தீங்குரற் பாட்டிலிருப்பாள்.
மக்கள்பேசும்மழலையி லுல்லாள்;
கீதம்பாடும்குயிலின்குரலைக்
கிளியினாவைஇருப்பிடங்கொண்டாள்;
சரணம்2
கோதகன்றதொழிலுடைத்தாகிக்
குலவுசித்திரம்கோபுரம்கோயில்
ஈதனைத்தின்எழிலிடையுற்றாள்
இன்பமேவடிவாகிடப்பெற்றாள். (வெள்ளைத்)
சரணம்3வஞ்சமற்றதொழில்புரிந்துண்டு
வாழும்மாந்தர்குலதெய்வமாவாள்;
வெஞ்சமர்க்குயிராகியகொல்லர்
வித்தையோர்ந்திடுசிற்பியர்,தச்சர்,
மிஞ்சநற்பொருள்வாணிகஞ்செய்வோர்,
வீரமன்னர்பின்வேதியர்யாரும்
தஞ்சமென்றுவணங்கிடும்தெய்வம்
தரணிமீதறிவாக்கியதெய்வம்.(வெள்ளைத்)
சரணம்4
தெய்வம்யாவும்உணர்ந்திடும்தெய்வம்,
தீமைகாட்டிவிளக்கிடும்தெய்வம்;
உவ்யமென்றகருத்துடையோர்கள்
உயிருனுக்குயிராககியதெய்வம்;
செய்வமென்றொரு செய்கையெடுப்போர்
செம்மைநாடப்பணிந்திடுதெய்வம்
கைவருந்திஉழைப்பவர்தெய்வம்
கவிஞர்தெய்வம், கடவுளர்தெய்வம் (வெள்ளைத்)
சரணம்5
செந்தமிழ்மணிநாட்டிடையுள்ளீர்!
சேர்ந்தித்தேவை வணங்குவம் வாரீர்!
வந்தனம்இவட்கேசெய்வதென்றால்
வாழியஹ்திங்கெளிதென்றுகண்டீர்!
மந்திரத்தைமுணுமுணு த்தேட்டை
வரிசையாகஅடுக்கிஅதன்மேல்
சந்தனத்தைமலரைஇடுவோர்
சாத்திரம்இவள்பூசனையன்றாம் (வெள்ளைத்)
சரணம்6
வீடுதோறும் கலையின் விளக்கம்,
வீதிதோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்கலெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியிலாததொ ரூரைத்
தீயி னுக்கிரையாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்! (வெள்ளைத்)
சரணம் 7
ஊனர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளி பெறுநாடு;
சேண கன் றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப்பார சிகப்பழந் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க(வெள்ளைத்)
சரணம் 8
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!
ஒங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மானமற்று விளங்குக
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!(வெள்ளைத்)
சரணம் 9
இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல் (வெள்ளைத்)
சரணம் 10
நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர் !
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இம்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!(வெள்ளைத்)
Subramani Bharathi composition Praise of Goddess Saraswathi
Lyrics: Pallavi
Vellai tamarai puvil iruppal
vinai seiyum oliyil iruppal
vinai seiyum oliyil iruppal
kollai inbam kulavu kavidai
koorum pavalar ullathilruppal
Anupallavi
ulladam porul thediyunarnde
odhum vedathin ulnintrin lolirval
kallamatra munivargal koorum
karunai vasagath thutporu laval (vellaith)
Charanam 1
madar teengurarar paatil iruppal
makkal pesum mazhalaiyil ullal
geedham padum kuyilin kuralaik
kiliyin navai iruppidum kondal
2. kodha ganra tozhiludaitagik
kulavu chittiram gopuram koyil
ida naittin ezhilidai yutral
inba mevadi vagidap petral
No comments:
Post a Comment