கண்ணம்மா
பல்லவி
எங்கள் கண்ணம்மா நகைபுது ரோஜாப்பூ;
எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப் பூ!
எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப்பூ;
எங்கள் கண்ணாம்மா நுதல்பால சூரியன்.
சரணங்கள்
1.எங்கள் கண்ணம்மா எழில்மின்னலைநேர்க்கும்;
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன்விற்கள்
திங்களை மூடியப பாம்பினைப் போலே
செறிகுழல்;இவள் நாசி எட் பூ (எங்கள்))
2.மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று;
மதுர வாய் அமிர்தம்; இதழமிர்தம்;
ஸங்கீத சரஸ்வதி ;வீணை;
சாயலரம்பை;சதுர அயிராணி(எங்கள்))..
3.இங்கித நாத நிலைய மிருசெவி;
சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்;
மங்கலக் கைகள் மஹாசக்தி வாஸம்;
வயிறா லிலை; இடை அமிர்தவீடு.(எங்கள்))
4.சங்கரனைத் தாங்கு நந்திபத சதுரம்;
தாமைரை யிருநாள் லக்ஷ்மீ பீடம்;
ப்ன்கித்ததும்பித் திசையெங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெ ய்த்திருக் கோலம்.(எங்கள்))
பல்லவி
எங்கள் கண்ணம்மா நகைபுது ரோஜாப்பூ;
எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப் பூ!
எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப்பூ;
எங்கள் கண்ணாம்மா நுதல்பால சூரியன்.
சரணங்கள்
1.எங்கள் கண்ணம்மா எழில்மின்னலைநேர்க்கும்;
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன்விற்கள்
திங்களை மூடியப பாம்பினைப் போலே
செறிகுழல்;இவள் நாசி எட் பூ (எங்கள்))
2.மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று;
மதுர வாய் அமிர்தம்; இதழமிர்தம்;
ஸங்கீத சரஸ்வதி ;வீணை;
சாயலரம்பை;சதுர அயிராணி(எங்கள்))..
3.இங்கித நாத நிலைய மிருசெவி;
சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்;
மங்கலக் கைகள் மஹாசக்தி வாஸம்;
வயிறா லிலை; இடை அமிர்தவீடு.(எங்கள்))
4.சங்கரனைத் தாங்கு நந்திபத சதுரம்;
தாமைரை யிருநாள் லக்ஷ்மீ பீடம்;
ப்ன்கித்ததும்பித் திசையெங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெ ய்த்திருக் கோலம்.(எங்கள்))
No comments:
Post a Comment