Thursday, July 19, 2012

பாரதசமுதாயம்வாழ்கவே-வாழ்கவாழ்க-bharatha samuthayam vazhkave-vazhka vazhka





பல்லவி 
பாரத சமுதாயம் வாழ்கவே-வாழ்க வாழ்க  
பாரத சமுதாயம் வாழ்கவே-ஜய  ஜய  ஜய (பாரத)
அனுபல்லவி 
முப்பது கோடி ஜனங்களின் சங்க 
முழுமைக்கும் பொது உடைமை 
ஒப்பில்லாத சமுதாயம் 
உலகத்துக்கு ஒரு புதுமை-வாழ்க (பாரத)
சரணங்கள் 
1.மனித ருணவை  மனிதர் பறிக்கும் 
வழக்க மினியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும் 
வாழ்க்கை யினியுண்டோ?-புலனில் 
வாழ்க்கை யினியுண்டோ?-நம்மி லந்த 
வாழ்க்கை யினியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள் 
எண்ணரும் பெருநாடு 
கனியுங் கிழங்குந் தானியங்களும் 
கணக்கின்றித் தரு நாடு-இது 
கணக்கின்றித் தரு நாடு -நித்தநித்தம் 
கணக்கின்றித் தரு நாடு -வாழ்க(பாரத) 

2.இனியொரு விதிசெய்வோம்-அதை 
எந்த நாளும் காப்போம்  
தனியொ ருவனுக் குணவிலை யெனில் 
ஜகத்தினை யழித்திடு வோம்- வாழ்க(பாரத)

3."எல்லா உயிகளிலும் நானே யிருக்கிறேன்"
என்றுரைத்தான் கண்ணபெருமாள் 
எல்லாரு மமரநிலை யெய்துநன்முறையை 
இந்தியா உலகிற் களிக்கும்-ஆம்   
இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் ஆம் 
இந்தியா உலகிற் களிக்கும்-வாழ்க(பாரத)

4.எல்லாரு மோர்குலம் எல்லாரு மோரினம் 
எல்லாரு மிந்திய மக்கள் 
எல்லாரு மோர்நிறை எல்லாரு மோர்வி 
எல்லாரும் இந்நாட்டு மனனர் -  நாம் 
எல்லாரும் இந்நாட்டு மனனர்-ஆம்  

எல்லாரும் இந்நாட்டு மனனர்-வாழ்க(பாரத)

No comments:

Post a Comment