Tuesday, June 19, 2012

1.யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 
இனிதாவ தெங்கும் காணோம் 
.....
2.யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் 
வள்ளுவர்போல்,இளங்கோவைப்போல் 
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை 
ஊமையராய்ச் செவிடர்களாய்க்குருடர்களாய் 
வாழ்கின்றோம்; ஒரு சொல் கேளீர் 
சேமமுற  வேண்டுமெனில் தெருவெல்லாம் 
தமிழ்முழக்கம் செழிக்கச்செய்வீர் 
..

1.செந்தமிழ்நாடென்னும் போதினிலே -இன்பத் 
தேன் வந்து பாயுது காதினிலே -எங்கள் 
தந்தையர் நாடென்ற பேச்சினிலே -ஒரு 
சக்தி பிறக்குது மூச்சினிலே எங்கள் (செந்தமிழ்)


2.வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் 
வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல 
காதல் புரியும் அரம்பையர் போலிளங் 
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

6.கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க் 
கம்பன் பிறந்த தமிழ்நாடு -நல்ல 
பலவித மாயின சாத்திரத் தின்மணம் 
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு (செந்தமிழ்)


7.வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து 
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை 
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி 

யாரம் படைத்த தமிழ்நாடு  (செந்தமிழ்)


Note: Two songs have been mixed




No comments:

Post a Comment