Friday, June 29, 2012

பராசக்தி துதி-Parasakthi thuthi

பராசக்தி துதி 


எனக்கு முன்னே சித்தர்  பல ரிருந்தாரப்பா! 
யானும்வந்தே நொருசித்தனிந்த நாட்டில் 
மனத்தினி லேநின்றிதனை யெழுது கின்றாள்  
மனோன்மணியென் மாசக்தி வையத் தேவி; 
தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும் 
செய்யமணித் தாமரைநேர் முகத்தால் காதல் 
வனந்தனிலே தன்னையொரு மலரைப் போலும் 
வண்டினைப்போ லெனையுமுரு மாற்றிவிட்டாள்.
தீராதகாலமெலாந் தானு நிற்பாள்,
தெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி.
நீராகக் கனலாக வானாக் காற்றா 
நிலமாக வடிவெடுத்தாள்;நிலத்தின் மீது 
போராக நோயாக மரணமாகப் 
போந்திதனை யழித்துடுவா;புனர்ச்சி கொண்டால்
நேராக மோனமஹானந்த வாழ்வை
நிலத்தின் மிசை யளித்தமரத் தன்மை யீவாள்
மாகாளி பராசக்தி உமையா ளன்னை  
வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி
பாகார்ந்த  தேன்மொழியாள், படருஞ் செந்தீ 
பாய்ந்திடுமோர் விழியுடையாள்,பரம சக்தி 
ஆகார மளித்திடுவாள், அறிவு தந்தாள்,
ஆதிபரா சக்தியென தமிர்த்ப் பொய்கை    
சோகா டவிக்குலெனைப் புக வொட்டாமல்    
துய்யசெழுந் தேன்போல கவிதை சொல்வாள் 
மரணத்தை வெல்லும் வழி 
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியு முண்மை  யெல்லாம் ;
முன்னோர்க லெவ்வுயிருங் கடவுலென்றார்.
முடிவாக அவ்வுரையை நான் மேற்கொண்டேன்;
அன்னோர்க ளுரைத்த தன்றிச் செய்கையில்லை 
அத்வைத நிலை கண்டால் மரணமுண்டோ?
முன்னோர் களுரைத்தபல சித்தரெல்லாம்
முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய்  விட்டார்.
பொந்திலே யுள்ளாராம்,  வனத்தி லெங்கோ 
புதர்களிலே யிருப்பாராம் பொதியை மீதே 
சந்தியிலே, சவுத்தியிலே நிழலைப் போல
சற்றேயங் கே தென் படுகின் றாராம்.
நொந்த புன்னைக் குத்துவதிற்  பயனொன்றில்லை.
நோவாலே மடிந்திட்டான்  புத்தன் கண்டீர்   
அந்தணனாம் சங்கரா சர்யன் மாண்டான்; 
அதற்கடுத்த விராமா னுஜனும் போனான்;
சிலுவையிலே அடியுண்டு இயேசு செத்தான்;
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;
பலர்புகழு மிராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;   
பார்மீது நான்சாகாதிருப்பேன் காண்பீர்!
மலிவுகண்டீ ரிவுண்மை,பொயகூறேன்யான்,
மடிந்தாலும்  பொய்கூறேன் மானு டர்க்கே;
நலிவுமில்லை, சாவுமில்லை,கேளீர், கேளீர்!
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப்  பொய்யை 
அசுரர்களின் பெயர் 
அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் 
அப்போது சாவுமிங்கே அழிந்து போகும்.
மிச்சத்தை பின்சொல்வேன்,சினத்தை முன்னே
வென்றிடுவீர்.மேதினியில் மரணமில்லை;
துச்சமென பிறர் பொருளைக் கருதலாலே.  
சூழ்ந்ததெலாங் கடவுலேனச் சுருதி சொல்லும் 
நிச்சயமா ஞானத்தை மறத்த தாலே.
தேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.  

No comments:

Post a Comment