டீ
1.தூண்டிற் புழுவினைப்போல் -வெளியே
சுடர் விளக்கினைப்போல்.
நீண்ட பொழுதாக-எனது
நெஞ்சு துடித்த தடீ
கூண்டுக் கிளியினைப் போல்-தனிமை
கொண்டு மிகவு நொந்தேன்.
வேண்டும் பொருளையெல்லாம்-மனது
வெறுத்து விட்ட தடீ
2.பாயின் மிசைநானும்-தனியே
படு திருக்கையிலே
தாயினக் கண்டாலும் -ஸகியே
வளர்த்து பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன் -ஸகியே
நுங்களுற வை யெல்லாம்.
3.உணவு செல்லவில்லை-ஸகியே
உறக்கம் கொள்ளவில்லை,
மனம் விரும்பவில்லை-ஸகியே
மலர் பிடிக்கவில்லை;
குணமுறுதியில்லை;எதிலும்
குழப்பம் வந்ததடீ;
கனமு முள்ளத்திலே-சுகமே
காணகிடைத்ததில்லை.
4.பாலுங் கசந்த தடீ -ஸகியே
படுக்கை நொந்ததடீ
கோலக் கிளி மொழியும் -செவியில்
குத்த லெடுத்ததடீ.
நாலு வ யித்தியரும்-இனிமேல்
நம்புதற் கில்லை என்றார்;
பாலத்து சோசியனும்-கிரகம்
படுத்து மென்று விட்டான்.
5.கனவு கண்டதிலே -ஒருநாள்
கண்ணுக்கு தோன்றாமல்,
இனம் வினங்கவில்லை,-எவனோ
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்த்தேன்;ஸகியே
மேனி மறைந்து விட்டான்
மனதில் மட்டிலுமே-புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ.
6.உச்சி குளிர்ந்ததடீ;ஸகியே
உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம் -முன்னைப்போல்
மண த்துக் கொத்தடீ
இச்சை பிறந்ததடீ -எதிலும்
இன்பம் விளைந்த்தடீ.
அச்ச மொழிந்ததடீ;-ஸ கியே
அழகு வந்ததடீ.
7.எண்ணும் பொழுதி லெல்லாம்,-அவன்கை
இட்ட விடத்திதினிலே
தண் ணன் றிருந்ததடீ;-புதிதோர்
சாந்தி பிறந்ததடீ;
எண்ணி எண்ணிப் பார்த்தேன்;-அவன்தான்
யாரெனச் சிந்த செய்தேன்;
கண்ணன் திருவுருவம்-அங்ங்னே
கண்ணின் முன் நின்றதடீ
.
1.தூண்டிற் புழுவினைப்போல் -வெளியே
சுடர் விளக்கினைப்போல்.
நீண்ட பொழுதாக-எனது
நெஞ்சு துடித்த தடீ
கூண்டுக் கிளியினைப் போல்-தனிமை
கொண்டு மிகவு நொந்தேன்.
வேண்டும் பொருளையெல்லாம்-மனது
வெறுத்து விட்ட தடீ
2.பாயின் மிசைநானும்-தனியே
படு திருக்கையிலே
தாயினக் கண்டாலும் -ஸகியே
வளர்த்து பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன் -ஸகியே
நுங்களுற வை யெல்லாம்.
3.உணவு செல்லவில்லை-ஸகியே
உறக்கம் கொள்ளவில்லை,
மனம் விரும்பவில்லை-ஸகியே
மலர் பிடிக்கவில்லை;
குணமுறுதியில்லை;எதிலும்
குழப்பம் வந்ததடீ;
கனமு முள்ளத்திலே-சுகமே
காணகிடைத்ததில்லை.
4.பாலுங் கசந்த தடீ -ஸகியே
படுக்கை நொந்ததடீ
கோலக் கிளி மொழியும் -செவியில்
குத்த லெடுத்ததடீ.
நாலு வ யித்தியரும்-இனிமேல்
நம்புதற் கில்லை என்றார்;
பாலத்து சோசியனும்-கிரகம்
படுத்து மென்று விட்டான்.
5.கனவு கண்டதிலே -ஒருநாள்
கண்ணுக்கு தோன்றாமல்,
இனம் வினங்கவில்லை,-எவனோ
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்த்தேன்;ஸகியே
மேனி மறைந்து விட்டான்
மனதில் மட்டிலுமே-புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ.
6.உச்சி குளிர்ந்ததடீ;ஸகியே
உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம் -முன்னைப்போல்
மண த்துக் கொத்தடீ
இச்சை பிறந்ததடீ -எதிலும்
இன்பம் விளைந்த்தடீ.
அச்ச மொழிந்ததடீ;-ஸ கியே
அழகு வந்ததடீ.
7.எண்ணும் பொழுதி லெல்லாம்,-அவன்கை
இட்ட விடத்திதினிலே
தண் ணன் றிருந்ததடீ;-புதிதோர்
சாந்தி பிறந்ததடீ;
எண்ணி எண்ணிப் பார்த்தேன்;-அவன்தான்
யாரெனச் சிந்த செய்தேன்;
கண்ணன் திருவுருவம்-அங்ங்னே
கண்ணின் முன் நின்றதடீ
.
No comments:
Post a Comment