Wednesday, July 4, 2012

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்றன்-Mohathai kondruvidu -allanenran



 1.மோகத்தைக்  கொன்றுவிடு - அல்லாலென்றன்
     மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச்  சாய்த்துவிடு - அல்லாலதில்
     சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு - அல்லாலென்றன்
     ஊனைச் சிதைத்துவிடு
ஏகத் திருத்துலகம் இங்குள்ளன
     யாவையும் செய்பவளே!

2.பந்தத்தை நீக்கிவிடு -அல்லாலுயிர்ப்ப
     பாரத்தை போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு -அல்லாலிதைச் 
     செத்த வுடலாக்கு   
இந்த பதர்களையே - நெல்லாமென் 
    எண்ணி இருப்பேனோ 
எந்த பொருளிலுமே - உள்ளேநின்
    றியங்கி இருப்பவளே.

3.உள்ளம் குளிராதோ பொய்யாணவ
    ஊன மொழியாதோ?
கள்ள  முருகாதோ -அம்மா பக்திக் 
    கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே -இந்நாய் சிறு 
    வேட்கை தவிராதோ? 
விள்ளற் கரியவளே - அனைத்திலு 
 மேவி இருப்பவளே!

3 comments:

  1. I wonder who is the viewer from coimbatore

    ReplyDelete
  2. Very thought provoking song. A simple explanatioon for this song is availaeble in https://youtu.be/sBT_v2FIg7g

    ReplyDelete
  3. பாரதி கூட மோகத்தினால் பாதிக்கப்பட்டிருக்க கூடும்.

    மோகத்தைக் கொன்று விடு

    எவ்வளவு வலிமையான வரிகள்
    பாரதி ஒரு மகத்தான COUNSELOR.

    ReplyDelete