Showing posts with label Mahakavi Bharathiyar. Show all posts
Showing posts with label Mahakavi Bharathiyar. Show all posts

Thursday, July 12, 2012

சந்திர னொளியி லவளைக் கண்டேன்-Chandhiran oliyil avalaik kanden


சந்திர னொளியி லவளைக்   கண்டேன்,






பல்லவி
சந்திர னொளியி லவளைக் கண்டேன்,
சரண மென்று புகுந்து கொண்டேன்;
அனுபல்லவி
இந்திரிய யங்களை வென்றுவிட்டேன்,
என தெனாசையை கொன்றுவிட்டேன்.1
சரணம் -1 
பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்;
துயரி லாதெனைச  செய்துவிட்டாள்'
துன்ப மென்பதைக்  கொய்து விட்டாள்.2

சரணம்-௨
மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தால்;
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்;
வான்க ணுள்ள வெளியச் செய்தாள் 
வழி நெஞ்சிற் களியச் செய்தாள்.3  

Pallavi:
Chandhiran oliyil avalaik kanden
Saranammenru pughundu konden
Anupallavi
Indiriyankalai venruvitten endedensaiyaik-konruvitten
Chararam-1

Payanennamal uzhaikka chonnal

bakthiseidhu pizhaikka chonnal
thuyarilathenaich seithuvillal
thumbammenbathaik  koithu vittal
charanam-2
Meengal seiyum oliyaich seithal
Veesi nirkum valiyaich seithal
Vanganulla veiliyaich seithal

Wednesday, July 4, 2012

சுட்டும் விழி சுடர்தான்,- கண்ணம்மா!-suttum vizhi sudarthan kannamma!






1.சுட்டும் விழி சுடர்தான்,- கண்ணம்மா!

 சூரிய சந்திரரோ?
வட்டக்கரியவிழி,-கண்ணம்மா! 
வானக்கருமை  கொள்லோ?
பட்டுகருநீலப்-புடவை 
பதித்த நல்வயிரம் 
நட்டநடுநிசியில் -தெரியும் 
நட்சதிரம்களடீ!

2.சோலைமல ரொளியோ- உனது 
சுந்தரப் புன்னகைதான்? 
நீலகட லலையே - உனது 
நெஞ்சில லைகளடீ! 
கோலக்குயி லோசை -உனது 
குரலி னிமையடீ  
வாலைக் குமரியடீ,-கண்ணம்மா 
மருவக் காதல் கொண்டேன் 

3.சாத்திரம் பேசுகிறாய் -கண்ணம்மா 
சாத்திரமேதுக்கடீ?
ஆத்திரம் கொண்டவர்க்கே,- கண்ணம்மா 
சாத்திர முண்டோடீ?
மூத்தவர் சம்மதியில்-வதுவை 
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப்பேனோடீ? இது பார்,

கன்னத்து முத்த மொன்று!

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்றன்-Mohathai kondruvidu -allanenran



 1.மோகத்தைக்  கொன்றுவிடு - அல்லாலென்றன்
     மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச்  சாய்த்துவிடு - அல்லாலதில்
     சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு - அல்லாலென்றன்
     ஊனைச் சிதைத்துவிடு
ஏகத் திருத்துலகம் இங்குள்ளன
     யாவையும் செய்பவளே!

2.பந்தத்தை நீக்கிவிடு -அல்லாலுயிர்ப்ப
     பாரத்தை போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு -அல்லாலிதைச் 
     செத்த வுடலாக்கு   
இந்த பதர்களையே - நெல்லாமென் 
    எண்ணி இருப்பேனோ 
எந்த பொருளிலுமே - உள்ளேநின்
    றியங்கி இருப்பவளே.

3.உள்ளம் குளிராதோ பொய்யாணவ
    ஊன மொழியாதோ?
கள்ள  முருகாதோ -அம்மா பக்திக் 
    கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே -இந்நாய் சிறு 
    வேட்கை தவிராதோ? 
விள்ளற் கரியவளே - அனைத்திலு 
 மேவி இருப்பவளே!