Wednesday, January 21, 2015

நெஞ்சு பொறுக்குதில்லையே-nenj porukkuthillaye-intha

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த 

1.நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 

அஞ்சி யஞ்சி சாவார்-இவர் 
அஞ்சாத பொருளில்லை அவனியிலே 
வஞ்சிப் பேய்களேன்பார்-இந்த 
மரத்திலென்பார்; அந்த குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டி லென்பார்-மிக 
துயர்படு வார்எண்ணி பயப்படுவார் (நெஞ்சு)


2.மந்திர வாதி யென்பார்-சொல்ல 
மாத்திரத்தி லே மனக் கிலிபிடிப்பார் 
யந்திர சூனியங்கள் -இன்னும் 
எத்தனை யாயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டோ- ஜனம் 
தாங்குவ ருலகத்தில் அரசரெல்லாம் 
அந்த அரசியலை -இவர் 
அஞ்சுதரு பேயென்றேண்ணி நெஞ்சமயர்வார்(நெஞ்சு)
  
3.சிப்பாயைக் கண்டஞ்சுவார்-ஊர்ச்-
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார் 
துப்பாக்கி கொண்டோருவன் -வெகு 
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார் 
அப்பாலெ வனோசெல்வான்-அவன் 
ஆடையைக் கண்டு பயந் தெழுந்துநிர்பபார் 
எப்போதும் கைத்தட்டுவார்-இவர் 
யாறிடத்தும் பூனைகள்போலேங்கிநடப்பார் (நெஞ்சு)
  
4.நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 
கொஞ்சமோ பிரிவினைகள் -ஒரு 
கோடியென் றால் அது பெரிதாமோ?
ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன் 
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால் 
நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு 
நெடுநாளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)


5.சாத்திரங்க  லொன்றுங்  காணார் -பொயச் 
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே 
கோத்திரம் ஒன் றாயிருந்தாலும் -ஒரு 
கொள்கையிற் பிரிந்தவனைக் குழைத்திகழ்வார் 
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் -தமைச் 
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார் 
ஆத்திரங்க்கொன் டேயிவன் சைவன் -இவன் 
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)

No comments:

Post a Comment