Wednesday, July 4, 2012

நல்லதோர் வீணை செய்தே - அதை-Nallathor veenai seith-athai





1.நல்லதோர் வீணை செய்தே - அதை
     நலங்கெடப் புழுதியிலெறிவருதுண்டோ? (நல்லதோர்

சொல்லடி, சிவசக்தி !~ எனைச்
     சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
     மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
     சுமையென வாழ்ந்திட புரிகுவையோ? (நல்லோதோர்)

2.விசையுறுப் பந்தினைப்போல் - உள்ளம்
     வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்
நசையறு மனங்  கேட்டேன், - நித்தம்
    நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் - உயிர் கேட்டேன் -
உயிர் கேட்டேன்
    தசையினச் தீச்சுடினும் - சிவ
சக்தியினை பாடும் நல்லகங்  கேட்டேன்
    அசய்வறு மதி கேட்டேன்; - இவை
அருள்வதில் உனக்கெதுந்  தடையுளதோ (நல்லதோர்)

சிவசக்தியிடம் பாரதி வேண்டுவது:
சுடர்மிகு அறிவுடன் பிறந்துவிட்ட என்னால்  இவ்வுலகம் பயன் பெறவேண்டும். அல்லால் நான் பிறந்த இம்மண்ணுக்கு சுமையாக இருப்பதில் அர்த்தமில்லை.அதற்கு நான் வேண்டியபடி செயல்பட மனம் கேட்கிறேன்.அதை செயல்படுத்த உடல் வேண்டும், உயிர் வேண்டும்  என் தசையினை தீச்சுடுமபோதும் உன்னை பாடும் உள்ளம் வேண்டும். அதை அருள்வதில் உனக்கு ஏதும் தடை இருக்க அவசியம் இருப்பதற்கில்லை.
இல்லை எனில் நல்ல வீணையை செய்து அதை புழிதியில் எறிவது போலாகும்.

Bharathi prays to God Sivasakthi:

You created me with flaming knowledge.This world should benefit from me.Otherwise I do not want to be a burden to this land where I was born.I want you to give me mind and health and life to do what I want to do.Give me the boon to sing about you even when my body is burnt.You will have no objection to grant me this

3 comments:

  1. This explanation is very useful for me to prepare for my exam.. tq

    ReplyDelete
  2. இந்த கொரோனா கொடூர நேரத்துக்கு இக்கவிதை எவ்வளவு பொருத்தமாக உள்ளது.
    இப்படி யாருக்கும் பயனின்றி புவிமங்கைக்கு பாரமாக வாழ்வதில் என்ன பயன் ?

    ReplyDelete