Monday, July 23, 2012

நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது;-Nallakalam varukutu;nallakalam varukuthu




1.நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது;
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;சொல்லடி, 
சொல்லடி, சக்தி மாகாளி!
வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு -

2.தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது; பாவம் தொலையுது;
படிச்சவன் சூது பாவமும் பண்ணினால்,
போவான்,போவான், ஐயோவென்றுபோவான் 

3.வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது.
தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான் 
சாத்திரம் வளருது;சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது;தந்திரம் வளருது;
மந்திரமெல்லாம் வளருது , வளருது 

4.சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;
தொப்பை சுருங்குது;சுறுசுறுப்பு விளையுது;
எட்டு லட்சுமியும் ஏரி  வளருது;
பயந் தொலையுது, பாவம் தொலையுது;
சாத்திரம் வளருது, சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது; 
பழைய பைத்தியம் படீலென்று தெளியுது;
வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது;
சொல்லடி சக்தி. மலையாள பகவதி!

தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.


No comments:

Post a Comment