Tuesday, July 24, 2012

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி– கண்ணம்மா-Ninnaiye rathiyenru ninaikkirenadi-kannammaa





பல்லவி  

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி– கண்ணம்மா
தன்னையே சகியென்று சரண மெய்தினேன்
(
நின்னையே)

சரணங்கள் 

1.பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயற்
பின்னையே-நித்ய-
கன்னியே, 

கண்ணம்மா( நின்னையே)

2.மாரனம் புகலென் மீது வாரி வாரி வீசநீ (2)
கண் பாராயோ-வந்து சேராயோ,

கண்ணம்மா ( நின்னையே)

3.யாவுமே சுகமுனிக்கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்

மே வுமேஇங்கு யாவுமே,கண்ணம்மா


(நின்னையே)

Monday, July 23, 2012

நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது;-Nallakalam varukutu;nallakalam varukuthu




1.நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது;
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;சொல்லடி, 
சொல்லடி, சக்தி மாகாளி!
வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு -

2.தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது; பாவம் தொலையுது;
படிச்சவன் சூது பாவமும் பண்ணினால்,
போவான்,போவான், ஐயோவென்றுபோவான் 

3.வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது.
தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான் 
சாத்திரம் வளருது;சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது;தந்திரம் வளருது;
மந்திரமெல்லாம் வளருது , வளருது 

4.சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;
தொப்பை சுருங்குது;சுறுசுறுப்பு விளையுது;
எட்டு லட்சுமியும் ஏரி  வளருது;
பயந் தொலையுது, பாவம் தொலையுது;
சாத்திரம் வளருது, சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது; 
பழைய பைத்தியம் படீலென்று தெளியுது;
வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது;
சொல்லடி சக்தி. மலையாள பகவதி!

தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.


எனக்கு வேண்டும் வரங்களை-enakku vendum varankalai




எனக்கு வேண்டும் வரங்களை 
     இசைப்பேன் கேளாய் கணபதி.
மனத்திற் சலனமில்லாமல், 
     மதியி லிருளே தோன்றாமல், 
நினைக்கும் பொழுது நின்மவுன 
     நிலைவந்  திடநீ செயல்வேண்டும் 
கனக்குஞ் செல்வம் நூறுவய    
     திவையுந் தரணி கடவாயே.

Thursday, July 19, 2012

பாரதசமுதாயம்வாழ்கவே-வாழ்கவாழ்க-bharatha samuthayam vazhkave-vazhka vazhka





பல்லவி 
பாரத சமுதாயம் வாழ்கவே-வாழ்க வாழ்க  
பாரத சமுதாயம் வாழ்கவே-ஜய  ஜய  ஜய (பாரத)
அனுபல்லவி 
முப்பது கோடி ஜனங்களின் சங்க 
முழுமைக்கும் பொது உடைமை 
ஒப்பில்லாத சமுதாயம் 
உலகத்துக்கு ஒரு புதுமை-வாழ்க (பாரத)
சரணங்கள் 
1.மனித ருணவை  மனிதர் பறிக்கும் 
வழக்க மினியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும் 
வாழ்க்கை யினியுண்டோ?-புலனில் 
வாழ்க்கை யினியுண்டோ?-நம்மி லந்த 
வாழ்க்கை யினியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள் 
எண்ணரும் பெருநாடு 
கனியுங் கிழங்குந் தானியங்களும் 
கணக்கின்றித் தரு நாடு-இது 
கணக்கின்றித் தரு நாடு -நித்தநித்தம் 
கணக்கின்றித் தரு நாடு -வாழ்க(பாரத) 

2.இனியொரு விதிசெய்வோம்-அதை 
எந்த நாளும் காப்போம்  
தனியொ ருவனுக் குணவிலை யெனில் 
ஜகத்தினை யழித்திடு வோம்- வாழ்க(பாரத)

3."எல்லா உயிகளிலும் நானே யிருக்கிறேன்"
என்றுரைத்தான் கண்ணபெருமாள் 
எல்லாரு மமரநிலை யெய்துநன்முறையை 
இந்தியா உலகிற் களிக்கும்-ஆம்   
இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் ஆம் 
இந்தியா உலகிற் களிக்கும்-வாழ்க(பாரத)

4.எல்லாரு மோர்குலம் எல்லாரு மோரினம் 
எல்லாரு மிந்திய மக்கள் 
எல்லாரு மோர்நிறை எல்லாரு மோர்வி 
எல்லாரும் இந்நாட்டு மனனர் -  நாம் 
எல்லாரும் இந்நாட்டு மனனர்-ஆம்  

எல்லாரும் இந்நாட்டு மனனர்-வாழ்க(பாரத)

காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்-kakkai siraginile nandalaalaa


காக்கை சிறகினிலே......
Priya sisters 5.10 minutes

K.J.Jesudas-2.33 MinutesP.Unnikrishnan-7.49 minutes


1.காக்கைச்  சிறகினிலே நந்தலாலா-நின்றன் 
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;

2. பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன் 
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;

3. கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன் 
கீத மிசைக்குதடா நந்தலாலா;

4.தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத் 
தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.
--பாரதியா
Lyrics In English:
1.kaakai siraginile nandhalala - nindran
kariya niram thondrudhaiye -nandhalala;
2.paarku marangalellam nandhalala - nindran
pachai niram thondrudhaiye nandhalala
3.kekum oliyil ellam nandhalala - nindran
geetham isaikudhada nandhalala;
4.theekkul viralai vaithal nandhalala - ninnaith
theendum inbam thondrudhada nandhalala
--Bharathiyar

I see your black colour in crow's feather Nandalala (krishna)
i see the green colour in all the trees i see Nandalala
In all the sounds I hear your songs Nandalala


If i put my fingers in fire i feel the touch of you nandalala

சுட்டும் விழி சுடர்தான்,- கண்ணம்மா!-Suttumvizhi sudarthaan kannamma





1.சுட்டும் விழி சுடர்தான்,- கண்ணம்மா!
 சூரிய சந்திரரோ?

வட்டக் கரியவிழி,-கண்ணம்மா! 
வானக் கருமை  கொள்லோ?
பட்டுக் கருநீலப்-புடவை 
பதித்த நல்வயிரம் 
நட்டநடுநிசியில் -தெரியும் 
நக்ஷதிரங்களடீ!

2.சோலைமல ரொளியோ- உனது 
சுந்தரப் புன்னகைதான்? 
நீலகட லலையே - உனது 
நெஞ்சில லைகளடீ! 
கோலக்குயி லோசை -உனது 
குரலி னிமையடீ  
வாலைக் குமரியடீ,-கண்ணம்மா 
மருவக் காதல் கொண்டேன் 

3.சாத்திரம் பேசுகிறாய் -கண்ணம்மா 
சாத்திரமேதுக்கடீ?
ஆத்திரம் கொண்டவர்க்கே,- கண்ணம்மா 
சாத்திர முண்டோடீ?
மூத்தவர் சம்மதியில்-வதுவை 
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப்பேனோடீ?இது பார்,
கன்னத்து முத்த மொன்று!


suttum vizhichchudardhaan- kaNNammaa
 sooriya chandhiraroa?
vattak kariyavizhi -kaNNammaa
vaanak karumai kolloa?
pattuk karuneelap- pudavai 
padhiththa nal vayiram
nattanadu nisiyil -theriyum 
natchaththirangaLadi

soalai malaroLiyoa- unadhu 
sundharap punnagaidhaan?
neelak kadalalaiyae- unadhu 
nenjin alaigaLadi
koalak kuyiloasai-unadhu 
kuralin inimaiyadi!
vaalaik kumariyadi -kaNNammaa!
 maruvak kaadhal koNdaen.

saaththiram paesugiRaay-கண்ணம்மா 
saaththiram edhukkad?i
aaththiram kondavarkkae.- kaNNamaa 
saaththiram uNdoadi?
mooththavar sammadhiyil -vadhuvai 
muRaigaL pinbu seyvoam
kaaththiruppaenoadi?- idhu paar 
kannaththu muthamonru!

காக்கைச் சிறகினிலே நந்தலாலா-kakkai siraginile nandalaalaa


P.Unnikrishnan

K.J.Jesudas

காக்கை சிறகினிலே...... 
1.காக்கைச்  சிறகினிலே நந்தலாலா-நின்றன் 
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;

2. பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன் 
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;

3. கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன் 
கீத மிசைக்குதடா நந்தலாலா;

4.தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத் 
தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.
--பாரதியா
Lyrics In English:
1.kaakai siraginile nandhalala - nindran
kariya niram thondrudhaiye -nandhalala;
2.paarku marangalellam nandhalala - nindran
pachai niram thondrudhaiye nandhalala
3.kekum oliyil ellam nandhalala - nindran
geetham isaikudhada nandhalala;
4.theekkul viralai vaithal nandhalala - ninnaith
theendum inbam thondrudhada nandhalala
--Bharathiyar

I see your black colour in crow's feather Nandalala (krishna)
i see the green colour in all the trees i see Nandalala
In all the sounds I hear your songs Nandalala

If i put my fingers in fire i feel the touch of you nandalala

Wednesday, July 18, 2012

ஆடுவோமே பள்ளுப்- பாடுவோமே-aduvome pallu paduvome







பல்லவி 
ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே:
ஆனந்த  சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று(ஆடுவோமே)
சரணங்கள் 
1.பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே -வெள்ளைப் 

பரங்கியத் துறையென்ற காலமும் போச்சே -பிச்சை 
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை 
ஏய்ப்போருக்கு ஏவல் செய்யுங் காலமும்போச்சே.(ஆடுவோமே)  
2.எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம்  
எல்லோருஞ் சமமென்ப துறுதியாச்சு 
சங்குகொண் டே வெற்றி யூதுவோமே-இதைத் 
தரணிக்கெல் லாமெடுத் தோதுவோமே(ஆடுவோமே)

3.எல்லாரு மொன்ரென்னுங் காலம் வந்ததே- பொய்யும் 
ஏமாற்றுந் தொலைகின்ற காலம்வந்ததே - இனி 
நல்லோர் பெரியரென்ரும் காலம்வந்ததே -கெட்ட 
நயவஞ்சகக் காரருக்கு நாசம் வந்ததே.(ஆடுவோமே)

4.உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் 
உண்டுகளித் திருபோரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம் -வெறும் 
வீனருக் குழைதுடலம் ஓயமாட்டோம்.(ஆடுவோமே)

5.நாமிருக்கு நாடுநம தென்பறிந்தோம் - இது 
நமக்கே யுரிமையா மென்பறிந்தோம் - இந்தப் 
பூமியி லெவர்க்குமினி அடிமைசெய்யோம் - பரி 
பூரணனுக் கேயடிமை செய்துவாழ்வோம்.(ஆடுவோமே)

தேடியுனைச்சரணடைந்தேன், தேசமுதுமாரி-

தேச முத்துமாரி 




1.தேடியுனைச் சரணடைந்தேன், தேசமுதுமாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்.

2.பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங்  களைவாய் 
கோடிநலஞ் செய்திடுவாய்,குறைகளெல்லாம் தீர்ப்பாய் 

3.எப்பொழுதுங் கவலையிலே இணங்கிநிற்பான் பாவி;
ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்.

4.சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க்கவிதை பாடி.
பக்தியுடன் போற்றிநின்றால் பயமனைத்துந் தீரும்.

5.ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம்;யாதுமவள் தொழிலாம்.

8.துன்பமே யியற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம்;யாவுமவள் தருவாள்.

9.நம்பினார் கெடுவதில்லை;நன்குமறைத் தீர்ப்பு 

அம்பிகையை சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம் .

Tuesday, July 17, 2012

எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி-enthaiyum thayum mahizhnindu kulave




Note: A visitor from Mountainview, California visited the video uploaded by me separately today-17/7/2012. I have uploaded the video with the lyrics of the song.

1.எந்தையுந்  தாயு மகிழ்ந்து குலாவி 
     யிருந்தது மிந்நாடே -அதன் 
முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து 
    முடிந்தது மிந்நாடே -அவர் 
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து 
    சிறந்தது மிந்நாடே -இதை 
வந்தனை கூறி மனதி லிருத்தியென் 
     வாயுற வாழ்த்தேனோ -இதை 
வந்தே மாதரம், வந்தே மாதரம் 
     என்று வணங்கேனோ?

2.இன்னுயிர் தந்தெமை யீன்று வளர்த்தரு 
      ளீந்தது மிந்நாடே -எங்கள் 
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி 
    அறிந்தது மிந்நாடே -அவர் 
கன்னி யராகி நிலவினி லாடிக் 
     களித்தது மிந்நாடே -தங்கள் 
பொன்னுட லின்புற நீர்வினை யாடியில் 
    போந்தது மிந்நாடே -இதை 
வந்தே மாதரம், வந்தே மாதரம் 
     என்று வணங்கேனோ?

3.மங்கைய ராயவர் இல்லற நன்கு 
     வளர்த்தது மிந்நாடே -அவர் 

தங்க மதலைக்  ளீன்றமு தூட்டித் 
     தழுவி திந்நாடே -மக்கள் 
துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள் 
     சூழ்ந்தது மிந்நாடே -பின்னர் 
அங்கவர் மாய அவருடற் பூந்துகள் 
    ஆர்ந்தது மிந்நாடே -இதை 
வந்தே மாதரம்,வந்தே மாதரம் 
     என்று வணங்கேனோ?

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் -Kannan mananilayai thangame thangam




1.கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் -
                                                               அடி தங்கமே தங்கம்
கண்டுவரவேணுமடி தங்கமே தங்கம்;
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம்,
 ஏதேனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம். 

2.கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம்-நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்;
அந்நிய மன்னர்மக்கள் பூமியிலுண்டாம் என்னும் 
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம். 

3.சொன்ன மொழிதவறு மன்னவனு க்கே எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்?அவை
 யாவுந் தெளிவு பெறக் கேட்டு விடடீ.

4.மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-
தலை மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே -கிழப் 
பொன்னி யுரைதததுண்டு தங்கமே தங்கம். 

5.ஆற்றங் கரையதனில் முன்ன மொருநாள்-எனை 
அழைத்துத் தனியிடத்திற் பேசிய தெல்லாம் 
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே 
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்.

6.சோர மிழைத்திடையர் பெண்க ளுடனே அவன்
சூழ்ச்சித் திறமைபல காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே 
வேண்டிய தில்லையென்று சொல்லிவிடடீ.

7.பெண்ணென்று பூமிதனிற் பிறந்துவிட்டால் -மிகப் 
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான்-அதைப் 
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே.

8.நேர முழுதிலுமப் பாவிதன்னையே - உள்ளம் 
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்;
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால்-

தெய்வமிருக்குதடி தங்கமே தங்கம்.

Monday, July 16, 2012

வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை-villinai othapuruvam valaiththanai



வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை;
வேலவா!-அங்கொர் 
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி 
யானது வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு
வல்லியைக்-கண்டு   
சொக்கி மரமென நின்றனை 
தென்மலைக் காட்டிலே 
கல்லினை ஒத்த வலிய மனங்கொண்ட 
பாதகன்-சிங்கன் 
கண்ணிரண் டாயிரங் காக்கைக் 
கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டி வெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை-ஒரு 
பார்ப்பனக் கோலந் தரித்துக் 
கரந்தொட்ட வேலவா!

வெள்ளலைக் கைகளைக் கொட்டிமுழ்ங்குங் 
கடலினை-உடல் 
வெம்பி மறுகிக் கருகிக் 
புகைய வெருட்டினாய்.  
கிள்ளை மொழிச்சிறு வள்ளி  யெனும்பெயர்ச் 
செல்வத்தை-என்றும் 
கேடற்ற வாழ்வினை-இன்ப 
விளக்கை மறுவினாய்.

கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு 
குலைத்தவன்-பானு 
கோபன் தலைபத்துக் கோடி  
துணுக்குறக்  கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன்  
மானைப்போல்-தினைத் 
தோட்டத்திலேயொரு பெண்ணை 
மனங்கொண்ட வேலவா! 
ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கினன்ப 
மாகுதே;-கையில் 
அஞ்சலெனுங்க்குறி கண்டு 
மகிழ்ச்சி யுன்டாகுதே,
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி 
யாவையும்-இங்கு 
நீக்கி அடியரை நித்தமுங் 
காத்திடும  வேலவா!
கூறு பலபலப் கோடி யவுணரின் 
கூட்டத்தைக்-கண்டு 

கொக்கரித் தண்டங் குலுங்க 
நகைத்திடுஞ் சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள்-எங்கள் 
விரவி பெற்ற பெருங்கன 
லே. வாடி வேலா!  

வில்லினைஒத்த புருவம்வளைத்தனை-villinai othapuruvam valaithanai

வேலன் பாட்டு 


வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை;
வேலவா!-அங்கொர் 
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி 
யானது வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு
வல்லியைக்-கண்டு   
சொக்கி மரமென நின்றனை 
தென்மலைக் காட்டிலே 
கல்லினை ஒத்த வலிய மனங்கொண்ட 
பாதகன்-சிங்கன் 
கண்ணிரண் டாயிரங் காக்கைக் 
கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டி வெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை-ஒரு 
பார்ப்பனக் கோலந் தரித்துக் 
கரந்தொட்ட வேலவா!

வெள்ளலைக் கைகளைக் கொட்டிமுழ்ங்குங் 
கடலினை-உடல் 
வெம்பி மறுகிக் கருகிக் 
புகைய வெருட்டினாய்.  
கிள்ளை மொழிச்சிறு வள்ளி  யெனும்பெயர்ச் 
செல்வத்தை-என்றும் 
கேடற்ற வாழ்வினை-இன்ப 
விளக்கை மறுவினாய்.


கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு 
குலைத்தவன்-பானு 
கோபன் தலைபத்துக் கோடி  
துணுக்குறக்  கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன்  
மானைப்போல்-தினைத் 
தோட்டத்திலேயொரு பெண்ணை 
மனங்கொண்ட வேலவா! 


ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கினன்ப 
மாகுதே;-கையில் 
அஞ்சலெனுங்க்குறி கண்டு 
மகிழ்ச்சி யுன்டாகுதே,
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி 
யாவையும்-இங்கு 
நீக்கி அடியரை நித்தமுங் 
காத்திடும  வேலவா!
கூறு பலபலப் கோடி யவுணரின் 
கூட்டத்தைக்-கண்டு 

கொக்கரித் தண்டங் குலுங்க 
நகைத்திடுஞ் சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள்-எங்கள் 
விரவி பெற்ற பெருங்கன 
லே. வாடி வேலா!  

Sunday, July 15, 2012

எண்ணியமுடிதல்வேண்டும்-enniya mudithal vendum

அன்னையை வேண்டுதல் 
எண்ணிய முடிதல் வேண்டும், 
நல்லவே யெண்ணல்  வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெளிந்த நல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவமெல்லாம் 
பரிதி முன் பனியே போல,
நண்ணிய நின்மு னிங்கு 
நசித்திட வேண்டும்  அன்னாய்! 

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா-chinnanchiru kiliye kannamma


சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா 
செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)
என்னைக்  கலிதீர்த்தே உலகில் 
ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு) 

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே! 
அள்ளியணைத்திடவே-என்முன்னே    
ஆடிவருந்  தேனே (சின்னஞ்சிறு)

ஓடி வருகையிலே- கண்ணம்மா!  
உள்ளம் குளிருதடீ; 
ஆடித்திரிதல்  கண்டால் உன்னைப்போய் 
ஆவி தவிழுதடி 

உச்சிதனை முகந்தால்  - கருவம் 
ஓங்கி வளருதடி 
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால் 
மேனி சிலிர்க்குதடீ.

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான் 
 கள்வெறி கொள்ளுதடீ 
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
 உன்மத்த மாகுதடீ. 

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில் 
 உத்திரங்  கொட்டுதடி; 
என் கண்ணில்  பாவையன்றோ? கண்ணம்மா 
என்னுயிர்  நின்னதன்றோ! 
என் உயிர் நின்னதன்றோ! 
என் உயிர் நின்னதன்றோ!

Sinnanchirukiliye kannamma
Selvakkalanjiyame (chinnanchiru)
Ennai kali theerka ulagil etram puriya vanthaai (chinnanchiru)
Pillai kaniyamuthe kannamma pesum porchithirame 
Alli anaithidave enmel aadi varum thene (chinnamchiru)
Odi varukaiyile kannamma ullam kuliruthadi 
Aadi thirthal kandaal unnaippoi aavi tazhuthadi 
Uchithanai mukarnthal karuvam ongi valarithadi 
Mechi unnai urar pugazhnthaal meni silirkuthadi
Kannathil muthamittal ullamthaan kalveri kolluthadi
Unnai thazhividilo kannammaa unmathamaguthadi
Un kannil neer vazhindaal en nenjil uthiram kottuthadi 
En kannil paavayanro kannammaa
En uyir ninnathanro!  en uyir ninnathanro! en uyir ninnathanro!

பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு payumoli neeyenakku,parkum vizhi nanunakku



  பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு
      தோயுமது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு.
 வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
      தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!1
வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
      பூணும் வடம்  நீயெனக்கு, புது வயிர நானுனக்கு;
காணுமிடந  தோறு நின்றன் கணணி னொளி வீசுதடீ 
      மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!2

வானமழை நீயெனக்கு,வண்ணமயில் நானுனக்கு;
     பானமடி நீயெனக்கு, பாண்டமடி  நானுனக்கு;
ஞானஒளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்,
      ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!3

வெண்ணிலவு நீயெனக்கு மேவு கடல் நானுனக்கு; 
      பண்ணுசுதி நீயெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணி யெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை!
                                                                                     நின் சுவைக்கே 
     கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!4

காதலடி நீயெனக்கு காந்தமடி நானுனக்கு; 
     வேதமடி நீயெனக்கு விந்தையடி நானுனக்கு; 
போதமுற்ற போதினிலே பொங்கிவருந்  தீஞ்சுவையே!
     நாதவடி வானவளே ! நல்லயுயிரே! கண்ணம்மா!5


வீசு கமழ நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீயெ னக்கு, பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே!நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!  அள்ளுசுவையே கண்ணம்மா 6

நல்லுயிர் நீயெனக்கு நா டியடி நானுனக்கு; 
செல்வமடி நீயெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழ்கே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!7

தாரயடி நீயெனக்கு,   தண்மதியம் நானுனக்கு:
வீரமடி நீயெனக்கு,வெற்றியடி நானுனக்கு;
 தாரணியில் வானுலகில்  சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் 
ஒருருவாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா!8

வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள்-Vellaithamarai pooviliruppal




பல்லவி
1 .வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள்
     வீணை செய்யும் ஒலியி லிருப்பாள்;
கொள்ளை யின்பங்குலவு கவிதை
     கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
அனுபல்லவி
1.உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
     ஓதும் வேதத்தின்உள்நின்  றொளிர்வாள்
கள்ளமற்றமுனிவர்கள்கூறும்
     கருணைவாசகத்  துட்பொருளாவாள்  (வெள்ளைத்)
சரணம்1
மாதர்தீங்குரற்  பாட்டிலிருப்பாள்.
     மக்கள்பேசும்மழலையி லுல்லாள்;
கீதம்பாடும்குயிலின்குரலைக்
     கிளியினாவைஇருப்பிடங்கொண்டாள்;
சரணம்2
கோதகன்றதொழிலுடைத்தாகிக்
     குலவுசித்திரம்கோபுரம்கோயில்
ஈதனைத்தின்எழிலிடையுற்றாள்
     இன்பமேவடிவாகிடப்பெற்றாள்.  (வெள்ளைத்)
சரணம்3
வஞ்சமற்றதொழில்புரிந்துண்டு 
     வாழும்மாந்தர்குலதெய்வமாவாள்;
வெஞ்சமர்க்குயிராகியகொல்லர்  
     வித்தையோர்ந்திடுசிற்பியர்,தச்சர்,
மிஞ்சநற்பொருள்வாணிகஞ்செய்வோர், 
     வீரமன்னர்பின்வேதியர்யாரும் 
தஞ்சமென்றுவணங்கிடும்தெய்வம் 
      தரணிமீதறிவாக்கியதெய்வம்.(வெள்ளைத்)
சரணம்4
தெய்வம்யாவும்உணர்ந்திடும்தெய்வம்,
     தீமைகாட்டிவிளக்கிடும்தெய்வம்;
உவ்யமென்றகருத்துடையோர்கள் 
     உயிருனுக்குயிராககியதெய்வம்;
செய்வமென்றொரு  செய்கையெடுப்போர்  
     செம்மைநாடப்பணிந்திடுதெய்வம் 
கைவருந்திஉழைப்பவர்தெய்வம் 
     கவிஞர்தெய்வம், கடவுளர்தெய்வம் (வெள்ளைத்)
சரணம்5
செந்தமிழ்மணிநாட்டிடையுள்ளீர்!
     சேர்ந்தித்தேவை  வணங்குவம் வாரீர்!
வந்தனம்இவட்கேசெய்வதென்றால்
     வாழியஹ்திங்கெளிதென்றுகண்டீர்!
மந்திரத்தைமுணுமுணு த்தேட்டை
     வரிசையாகஅடுக்கிஅதன்மேல் 
சந்தனத்தைமலரைஇடுவோர் 
     சாத்திரம்இவள்பூசனையன்றாம்    (வெள்ளைத்)
சரணம்6
வீடுதோறும்  கலையின்  விளக்கம்,
     வீதிதோறும்  இரண்டொரு  பள்ளி;
நாடு  முற்றிலும்  உள்ளன  வூர்கள் 
      நகர்கலெங்கும்  பலபல  பள்ளி;
தேடு  கல்வியிலாததொ  ரூரைத் 
     தீயி  னுக்கிரையாக  மடுத்தல் 
கேடு  தீர்க்கும்  அமுதமென்  அன்னை 
     கேண்மை  கொள்ள  வழியிவை  கண்டீர்! (வெள்ளைத்)
சரணம் 7
ஊனர் தேசம் யவனர்தந் தேசம் 
     உதய ஞாயிற் றொளி பெறுநாடு;
சேண கன் றதோர் சிற்றடிச் சீனம்   
     செல்வப்பார சிகப்பழந் தேசம் 
தோண லத்த துருக்கம் மிசிரம் 
     சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும் 
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம் 
      கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க(வெள்ளைத்) 
சரணம் 8
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் 
     நல்ல பாரத நாட்டிடை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!
     ஒங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மானமற்று விளங்குகளுக் லொப்ப 
     மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போனதற்கு வருந்துதல் வேண்டா 
      புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!(வெள்ளைத்) 
சரணம் 9
இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் 
     இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் 
     ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.
பின்ன ருள்ள தருமங்கள்  யாவும் 
     பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும்  புண்ணியம் கோடி 
      ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல் (வெள்ளைத்)
சரணம் 10
நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
 நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர் !
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம் 
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும் 
இம்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!(வெள்ளைத்)

Subramani Bharathi composition Praise of Goddess Saraswathi 
Lyrics: Pallavi
Vellai tamarai puvil iruppal
vinai seiyum oliyil iruppal
kollai inbam kulavu kavidai
koorum pavalar ullathilruppal  
Anupallavi
ulladam porul thediyunarnde
odhum vedathin ulnintrin lolirval
kallamatra munivargal koorum
karunai vasagath thutporu laval (vellaith)
Charanam 1
madar teengurarar paatil iruppal
makkal pesum mazhalaiyil ullal
geedham padum kuyilin kuralaik
kiliyin navai iruppidum kondal

2. kodha ganra tozhiludaitagik
kulavu chittiram gopuram koyil
ida naittin ezhilidai yutral
inba mevadi vagidap petral