Thursday, October 28, 2010

Nirpathuve Nadappathuve -நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பனவே


௧. நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பனவே நீங்களெல்லாம் 
சொப்பனந்தானோ  - பல தோற்ற மயக்கங்களோ 
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம் 
அற்ப மாயைகளோ? - உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 


௨.வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
கானல் னீரோ -வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால் 
நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? 


௩.காலமென்றே யொருநினைவுங்  காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யோ? - இதை சொல்லோடு சேர்ப்பாரோ?


௪.காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்த தெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு  பொய்யிலே நித்தம் - விதிதொடர்ந்திடுமோ/
காண்பதுவே யுறுதிகண்டோம் காண்பதல்லா லுறிதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி   நித்தியமாம்



குறிப்பு: 'நிற்பது' நடப்பது' முதலியன உலகத்தில் தோன்றும் வடிவங்கள்; 'கற்பது' கேட்பது" முதலியன செய்கைகள்
"கோலமும் பொய்களோ' 'அங்கு குணங்களும் பொய்களோ" என்பது தெளிவாகச் சொன்னால் , 'தேளின் உருவம் மாத்திரம் பொய்யோ? அது கொட்டுவதும் பொய்தானோ' என்ற கேள்வி.
குறிப்பு: கடைசி பாராவில் உள்ள வரிகள் மாற்றி பாடப்படுகிறது.  

1 comment: