Monday, October 25, 2010

Muruga, Muruga, Muruga -முருகா, முருகா, முருகா



பல்லவி
முருகா, முருகா, முருகா
சரணங்கள்
1 .வருவாய் மயில்மி தினிலே
   வடிவேலு டனே வருவாய்
    தருவாய் நலமுந தகவும் புகழுந
    தவமுந  திறமுந தனமுங் கனமே (முருகா)
 2 .அடியார் பலரிங் குளரே
    அவரை விடுவித்  தருள்வாய்
    முடிய மறையின் முடிவே  அசுரர் 
     முடிவே கருதும் வடிவேலவனே  (முருகா)
3 .சுருதிப் பொருளே வருக,
    துணிவே, கனலே, வருக 
    கருதிக் கருதிக் கவலைப்படுவார் 
     கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா)
4 . அமரா  வதிவாழ் வுறவே 
     அருள்வாய்! சரணம்!  சரணம்!
      குமரா பிணியா வையுமே சிதறக்
      குமுறும் சுடர்வடி வேலவனே, சரணம்  (முருகா)
5 . அறியர் கியகோ யிலிலே
      அருளா கியதாய் மடிமேல்
      பொறிவே லுடனே வளர்வாய்,அடியார்
     புதுவாழ்  வுறவே புவிமீ தருள்வாய் (முருகா)
6 . குருவே, பரமன்,மகனே
     குகையில் வளரும் கனலே  
      தருவாள் தொழிலும் பயனும், அமரர்
      சமரர் திபனே, சரணம், சரணம் (முருகா)

2 comments:

  1. A visitor from Madurai viewed this today

    ReplyDelete
  2. visitor fro suwanee, Georgia viewed this 28minutes ago.

    ReplyDelete