Tuesday, October 26, 2010

காணி நிலம் வேண்டும் – kani nilam vendum





Presented by S.Prabakar

1.காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்;
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்அங்கு 

தூணி லழகியதாய் - நன்மாடங்கள் 

துய்ய நிறத்தினதாய் - அங்கு 
தூணி லழகியதாய் - நன்மாடங்கள் 
துய்ய நிறத்தினதாய் - அந்தக் 

காணி நிலத்தினிடையே – ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் - அந்தக் 
காணி நிலத்தினிடையே – ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் - அங்கு

கேணி யருகினிலே - தென்னைமரம்k கீற்று மிளநீரும் – அங்கு
கேணி யருகினிலே - தென்னைமரக  கீற்று மிளநீரும
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்2.பத்துப் பன்னிரண்டுபத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்-அதன்  

பக்கத்திலே வேணும்
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்-அதன்  
பக்கத்திலே வேணும் - நல்ல 

முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - அங்கு 

கத்துங் குயிலோசை, கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்,
கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும், - என்றன் 

சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்றல் வரவேணும்- என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்றல் வரவேணும்

காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்;
3.பாட்டுக் கலந்திடவே, பாட்டுக் கலந்திடவே - அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்
பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள் 

கூட்டுக் களியினிலே - கவிதைகள் கொண்டுதர வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள் கொண்டுதர வேணும் - அந்தக் 

காட்டு வெளியினிலே – அம்மா, நின்றன் காவ லுறவேணும்- அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா, நின்றன் காவ லுறவேணும்- என்றன் 

பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப் பாலித்திட வேணும்- என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப் பாலித்திட வேணும்

காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்
பராசக்தி காணி நிலம் வேண்டும்
பராசக்தி காணி நிலம் வேண்டும  
Meaning:
a piece of land I want, parasakthi
     a piece of land I want
there with carved pillars-balconies
     painted in pristine white-in
that acre of land such a house
     do I need to be built –with
coconut leaves hugging the well with
     tender coconuts
ten or twelve - coconut trees
     do I want nearby – like
shine of flawless pearl –moonlight
     do I want to be with me,
 the cooing of cuckoo-do i want to-
     grace my ears –to make my soul happy-
soft, gentle breeze should be there too.
     to sing the songs of pleasure- there
I want a chaste damsel with me –in
     our joyous union-verses should flow freely-in
In that sylvan locale – Parasakthi! Your
     benign presence I need – with my
poetic abilities-should this world be graced.

11 comments: