1.மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்றன்
மூச்சை நிறுத்திவிடுதேகத்தைச் சாய்த்துவிடு - அல்லாலதில்
சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு - அல்லாலென்றன்
ஊனைச் சிதைத்துவிடு
ஏகத் திருத்துலகம் இங்குள்ளன
யாவையும் செய்பவளே!
2.பந்தத்தை நீக்கிவிடு -அல்லாலுயிர்ப்ப
பாரத்தை போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு -அல்லாலிதைச்
செத்த வுடலாக்கு
இந்த பதர்களையே - நெல்லாமென்
எண்ணி இருப்பேனோ
எந்த பொருளிலுமே - உள்ளேநின்
றியங்கி இருப்பவளே.
3.உள்ளம் குளிராதோ பொய்யாணவ
ஊன மொழியாதோ?
கள்ள முருகாதோ -அம்மா பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே -இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே - அனைத்திலு
மேவி இருப்பவளே!
thanks again for the visitor from New Delhi
ReplyDeleteA visitor from Madras viewed this today
ReplyDeleteA visitor from Bankok,kreng Thep viewed this yesterday
ReplyDelete