பராசக்தி துதி எனக்கு முன்னே சித்தர் பல ரிருந்தாரப்பா! யானும்வந்தே நொருசித்தனிந்த நாட்டில் மனத்தினி லேநின்றிதனை யெழுது கின்றாள் மனோன்மணியென் மாசக்தி வையத் தேவி; தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும் செய்யமணித் தாமரைநேர் முகத்தால் காதல் வனந்தனிலே தன்னையொரு மலரைப் போலும் வண்டினைப்போ லெனையுமுரு மாற்றிவிட்டாள். தீராதகாலமெலாந் தானு நிற்பாள், தெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி. நீராகக் கனலாக வானாக் காற்றா நிலமாக வடிவெடுத்தாள்;நிலத்தின் மீது போராக நோயாக மரணமாகப் போந்திதனை யழித்துடுவா;புனர்ச்சி கொண்டால் நேராக மோனமஹானந்த வாழ்வை நிலத்தின் மிசை யளித்தமரத் தன்மை யீவாள் மாகாளி பராசக்தி உமையா ளன்னை வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி பாகார்ந்த தேன்மொழியாள், படருஞ் செந்தீ பாய்ந்திடுமோர் விழியுடையாள்,பரம சக்தி ஆகார மளித்திடுவாள், அறிவு தந்தாள் ,ஆதிபரா சக்தியென தமிர்த்ப் பொய்கை சோகா டவிக்குலெனைப் புக வொட்டாமல் துய்யசெழுந் தேன்போல கவிதை சொல்வாள் மரணத்தை வெல்லும் வழி பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு புகலுவேன் யானறியு முண்மை யெல்லாம் ; முன்னோர்க லெவ்வுயிருங் கடவுலென்றார். முடிவாக அவ்வுரையை நான் மேற்கொண்டேன்; அன்னோர்க ளுரைத்த தன்றிச் செய்கையில்லை அத்வைத நிலை கண்டால் மரணமுண்டோ? முன்னோர் களுரைத்தபல சித்தரெல்லாம் முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார். பொந்திலே யுள்ளாராம், வனத்தி லெங்கோ புதர்களிலே யிருப்பாராம் பொதியை மீதே சந்தியிலே, சவுத்தியிலே நிழலைப் போல சற்றேயங் கே தென் படுகின் றாராம். நொந்த புன்னைக் குத்துவதிற் பயனொன்றில்லை. நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் அந்தணனாம் சங்கரா சர்யன் மாண்டான்; அதற்கடுத்த விராமா னுஜனும் போனான்; சிலுவையிலே அடியுண்டு இயேசு செத்தான்; தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்; பலர்புகழு மிராமனுமே யாற்றில் வீழ்ந்தான்; பார்மீது நான்சாகாதிருப்பேன் காண்பீர்! மலிவுகண்டீ ரிவுண்மை,பொயகூறேன்யான், மடிந்தாலும் பொய்கூறேன் மானு டர்க்கே; நலிவுமில்லை, சாவுமில்லை,கேளீர், கேளீர்! நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை அசுரர்களின் பெயர் அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவுமிங்கே அழிந்து போகும். மிச்சத்தை பின்சொல்வேன்,சினத்தை முன்னே வென்றிடுவீர்.மேதினியில் மரணமில்லை; துச்சமென பிறர் பொருளைக் கருதலா லே. சூழ்ந்ததெலாங் கடவுலேனச் சுருதி சொல்லும் நிச்சயமா ஞானத்தை மறத்த தாலே. தேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் -பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி- ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம
1.கணபதிராயன் -அவனிரு
காலைப் பிடித்திடுவோம்
குணமு யர்ந்திடவே-விடுதலை
கூடி மகிழ்ந்திடவே ( ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)
2.சொல்லுக் கடங்காவே-பராசக்தி
சூரத் தனங்கலெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பராசக்தி
வாழியென் றேதுதிப்போம் ( ஓம்சக்தி ஓம்சக்தி ஓ)ம்
3.வெற்றிவடிவேலன் -அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்;
சுற்றிநில்லாதேபோ!-பகையே!
துள்ளிவருகுதுவேல்( ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)
4.தாமரைப்பூவினிலே -சுருதியைத்
தனியிருந்துரைப்பாள்
பூமணித் தாளினையே-கண்ணிலொற்றிப்
புண்ணிய மெய்துடுவோம்( ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)
5.பாம்புத் தலைமேலே-நடஞ்செயும்
பாதத்தினைப் புகழ்வோம்
மாம்பழ வாயினிலே -குழலிசை
வண்ணம் புகழ்ந்திடுவோம்( ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)
6.செல்வத் திருமகளை-திடங்கொண்டு
சிந்தை செய்திடுவோம்
செல்வமெல்லாந்தருவாள்-நமதொளி
திக்கனைத் தும்பரவும்
பொய்யோ?மெய்யோ?
(எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மையதான். ஆனால் எல்லோருக்கும், எப்போதும் ஒரே சாஸ்திரம் ஒத்து வராது.சின்ன த்ரிச்டாந்திரம் சொல்லுகிறேன்.)
ஒரு செல்வர், ஒரு கிழவனார்: ஒரு வேளை ஆகாரம் செய்துகொண்டு,லௌகிக விஷயங்களைத் தான் கவனியாமல் பிள்ளைகள் கையிலே கொடுத்துவிட்டு, நியம நிஷ்டைகள் ஜப தபங்களுடன் சுந்தர காண்டத்தையும் கடோபநிஷத்தையும் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேமலிருப்பதே மேலான வழி என்ற கொள்கை இந்தக் கிழவனாருக்குச் சரிப்பட்டுவிடும்.
ஒரு 16 வயது ஏழைப்பிள்ளை :தகப்பனில்லை.வீட்டிலே தாயாருக்கு, தங்கைக்கும் தனக்குமாக எங்கேனும் போய் நாலு பணம் கொண்டுவந்தால்தான் அன்றன்று அடுப்பு மூட்டலாம்.இவன் மேற்படி சுந்தரகாண்டவழியைப் பொய் பிடித்தால் நியாயமாகுமா?
இந்த உலகமே பொய் என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கி வருகிறது.ஸந்யாசிகள் இதை ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கட்டும்.
அதைப் பற்றி எனக்கு இந்த நிமிஷம் வருத்தமில்லை.குடும்பத் திலிரு ப்போர்க்கு அந்த வார்த்தை பொருந்துமா?நடு வீட்டில் உச்சரிக்கலாமா?
அவச்சொல்லன்றோ? நமக்கு தந்தை வைத்து விட்டுப் போன வீடும், வயலும் பொய்யா?தங்கச் சிலை போல நிற்கிறாள் மனைவி னது துயர த்துக்கெல்லாம் கண்ணீர் விட்டுகரைந்தாள்;நமது மகிழ்ச்சியின் போதெல்லாம் உடல் பூரித்தாள்;நமது குழந்தைகளை வளர்த்தல்; அவள் பொய்யா?குழந்தகளும் பொய்தானா?பெற்றவரிடம் கேட்கிறேன்.குழந்தைகள் பொய்யா?நமது வீட்டில் வைத்து கும்பிடும் குலதெய்வம் பொய்யா?
வீடு கட்டி குடித்தனம் பண்ணுவோருக்கு மேற்ப்படி சாஸ்திரம் பயன் படாது.நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது,நோயில்லமை,அறிவு, செல்வம் என்ற நான்கும்.இவற்றை தரும்படி தத்தம் குலதெய்வங்களை மன்றாடிக் கேட்க வேண்டும். எல்லா தெய்வங்களும் ஒன்று.ஆறாம், பொருள், இன்பம் என்ற மூன்றிலும் தெய்வ ஒளி காணவேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் நிலையாகிய வீடு தானே கிடைக்கும்.
1. நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பனவே நீங்களெல்லாம் சொப்பனந்தானோ - பல தோற்ற மயக்கங்களோ கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ? - உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 2.. வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம் கானல் னீரோ -வெறும் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால் நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? 3.. காலமென்றே யொருநினைவுங் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ? சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால் சோலை பொய்யோ? - இதை சொல்லோடு சேர்ப்பாரோ? 4.. காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்த தெல்லாம் காண்பமன்றோ? வீண்படு பொய்யிலே நித்தம் - விதிதொடர்ந்திடுமோ/ காண்பதுவே யுறுதிகண்டோம் காண்பதல்லா லுறிதியில்லை காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி நித்தியமாம்
பின்னுரை: முதற் பாட்டிலே "நிற்பது"நடப்பது" முதலியன உலகத்தில் தோன்றும் வடிவங்கள்;"கற்பது"கேட்பது"முதலியன செய்கைகள்.மூன்றாம் பாட்டிலே "கோலமும் பொய்களோ,அங்குக் குண ங்களும் பொய்களோ"பொய்களோ என்பது,தெளிவாகச்சொன்னால்."தேளின் உருவம் மாத்திரம்
பொய்யோ?அது கொட்டுவதும் பொய்தானோ? என்ற கேள்வி.
VIDEO
கந்தசஷ்டி கவசம்
குறள் வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்.
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்
நிஷ்டையும் கைகூடும்.
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
காப்பு
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.
நூல்
சஷ்டியை நோக்க சரவணா பவனார்
சிஷ்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி ஆட
மையல் நடஞ்செய்யும் மயிவாகனனார்.............5
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக............10
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோ ன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக.........15
சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறன.........20
வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளுக இளையோன் வருக
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரன்டலங்க........25
விரைந்தனைக் காக்க வேலோன்வருக
ஐயும் கிலியும் அடை வு டன்சௌவும்
உய்யொளி சௌவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்
நிலைபெற் றேன் முன் நிதமும் ஒளிரும் ....30
சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்........35
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்தின மாலையும்......40
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளி பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணை முழந்தாளும்.....45
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செகக ண செககண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக ந கென
டிகுகுண டிகு டிகு டிகுகுண டிகுகண.....50
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரி ரிரி
டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு
டகுடகு டிகு டிகு டங்கு டிங்குகு
விந்து வித்து மயிலோன் விந்து.......55
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று .....60
உன்திரு வடியை உருதி என்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க....65
பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப பெருகவேல் காக்க.....70
முப்பத திருப்பல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க.....75
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே ளிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க.....80
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுற செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க.....85
வட்ட குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடையிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினண அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க....90
முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் காக்க
நாவில் ஸரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க....95
எப்பொழுதும் எனை எதில்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க...100
ஏமத்தில் ஜாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தக்கத் தக்கத் தடையறத் தாக்க....105
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பு தம் வலாஷ்டிகப் பேய்களும்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்...110
கொள்ளிவாய்ப்பேய்களும் குரலைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக்கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்...115
கன புசைகொள்ளும் காளியோடனே வரும்
விட்டங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்...120
பு னை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிறும் நீண்டமுடி மண்டையும்
பாவைகளுடனும் பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்....125
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்த குலைத்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டாற் கலங்கிட....130
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக் கையிற்றால்
கட்டுடன் அங்கம் கதறி ட க்கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய...135
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடிவேலால்....140
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனிதொடர்ந் தோட....145
தேளும் பாம்பும் செய்யான் புரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப பித்தம்...150
சூலைசயங் குன்மம் சொக்குச்சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பரு அ ரை யாப்பும்....155
எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லாதோட நீ எனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்...160
உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரஹண பவணே சையொளி பவ னெ
திரிபுர பவ னெ திகழொளி பவ னெ
பரிபுர பவ னெ பவம் ஒளி பவ னெ
அரிதிரு மருகா அமரா பதியைக் ...165
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விதித்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை ஏன்ற இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா....170
கதிகா மத்துறை கதிர்வேல் முருகா
பழனிப் பதிவாழ் பாலகுமாரா
ஆவினன்குடி வாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே...175
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனை
பாடினே ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடனேன் ஆவினன் பூதியை....180
நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புட ன் இரஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த மெத்த தாக வேலா யுதனார்...185
சித்திப்பெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்...190
வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குறு பொறுப்பது உன் கடன் ...195
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரியமளித்து
மைந்த னெ ன் மீது மனமகிழ்ந்தளிலித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய....200
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன் ஓருநினைவது வாகி
கந்தர் சஷ்டக் கவசம் இதனைச்....205
சிந்தை கலங்காது தியானிப்பவவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டதி க்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்...210
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்தநாளுமீ ரெட்டா வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத்தடியை...215
வழியாற் கான மெய்யாம் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரை பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி...220
அறிந்தென் துள்ளம் அஷ்டலட் சிமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத் துணித்தகை யதனால் .
இருபபத் தேர்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்...225
சின்னக் குழந்தை சேவடி போற்றும்
என்னை தடுத தாட்க்கொள்ள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனாபதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி....230
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே....235
மயில்நடமிடுவாய் மலர் அடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்...238
ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.
Note;The tamil lyrics was personallly typed by me
VIDEO