Tuesday, December 27, 2011

எந்தையும் தாயு மகிழ்ந்து குலாவி-enthaiyum thaym makizhinthu kulavi

எந்தையும் தாயு மகிழ்ந்து குலாவி
யிருந்தது மிந்நாடே - அதன் 
முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து 
முடிந்தது மிந்நாடே - அவர் 
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து 
சிறந்தது மிந்நாடே - இதை
வந்தனை கூறி மனதி லிருத்தியென்
வாயுற வாழ்த்தேனோ -இதை 


(பல்லவி)வந்தே மாதரம், வந்தே மாதரம் 
என்று வணங்கேனோ? 


இன்னுயுயிர் தந்தெமை யீன்று வளர்த்தரு
ளீந்தது மிந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்தது மிந்நாடே - அவர்
கண்ணிய ராகி நிலவினி லாடிக் 
களித்தது மின்னடே - தங்கள் 
பொன்னுட லின்புற நீர்விளை யாடியில் 
போந்தது மிந்நாடே -இதை 


(பல்லவி) வந்தே மாதரம், வந்தே மாதரம் 



என்று வணங்கேனோ? 
மங்கைய ராயவர் -ல்லற நன்கு 
வளர்த்தது மிந்நாடே -அவர்
தங்க மதலைக லீன்றமு தூட்டித் 

தழுவிய திந்நாடே -மக்கள் 
துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்தது மிந்நாடே -பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்தது மிந்நாடே - இதை


(பல்லவி))வந்தே மாதரம், வந்தே மாதரம் 
என்று வணங்கேனோ? 


No comments:

Post a Comment