காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
கனியிலே -னிப்பதென்னே?கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே?கண்ண பெருமானே -நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே?கண்ண பெருமானே!
காற்றிலே குளிர்ந்த தென்னே? கண்ண பெருமானே -நீ
கனலிலே சுடுவ தென்னே?கண்ண பெருமானே!
சேற்றிலே குழம்ப லென்னே?கண்ண பெருமானே-நீ
திக்கிலே தெளிந்த தென்னே?கண்ண பெருமானே!
ஏற்றிநின்னைத் தொழுவதென்னே?கண்ணபெருமானே -நீ
எளியர்தம்மைக் காப்ப தென்னே?கண்ண பெருமானே!
போற்றினோரைக் காப்ப தென்னே?கண்ண பெருமானே!-நீ
ஏற்றிநின்னைத் தொழுவதென்னே?கண்ணபெருமானே -நீ
எளியர்தம்மைக் காப்ப தென்னே?கண்ண பெருமானே!
போற்றினோரைக் காப்ப தென்னே?கண்ண பெருமானே!-நீ
பொய்யர் தம்மை மாயப்ப தென்னே?கண்ண பெருமானே!
போற்றி!போற்றி!போற்றி![போற்றி! கண்ண பெருமானே!-நின்
பொன்னடிகள் போற்றி நின்றேன், கண்ண பெருமானே!
பொன்னடிகள் போற்றி நின்றேன், கண்ண பெருமானே!
No comments:
Post a Comment