தேடியுனைச் சரணடைந்தேன், தேசமுத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந தருவாய்.
பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந தீர்ப்பாய்
தேடியுனைச் சரணடைந்தேன், தேசமுத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந தருவாய்.
பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந தீர்ப்பாய்
எப்போழுதுங் கவலையிலே இணைந்கிநிற்பான் பாவி
ஒப்பியுன் தேவல்செய்வேன் உனதருளால் வார்வேன்
சக்தியென்று நேரமெல்லந தமிழ்க்கவிதை பாடி,
பக்தியுடன் போற்றிநின்றால் பயமனைதுந தீரும்.
ஆதாரம சக்தியென்றே அருமறைகள் கூறும்;
யாதானுந தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்.
துன்பமே யியர்கை எனும் சொல்லைமறந திடுவோம்
இன்பமே வேண்டிநிற்போம்; யாவுமவள் தருவாள்.
இன்பமே வேண்டிநிற்போம்; யாவுமவள் தருவாள்.
நம்பினார் கெடுவதில்லை; நான்குமறைத் தீர்ப்பு;
அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்.
No comments:
Post a Comment