Thursday, March 22, 2012

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்-nenujukku neethiyum tholukku vaalum

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
     நிறைந்த சுடர்மணிப்பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்க ளாம் இவள்
     பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
     வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்றே யுரைப் பீர் அவள் பேர் சக்தி
     ஓம் சக்தி , ஓம்சக்தி, ஓம்
2.நல்லதும் தீயதுஞ் செய்திடும் சக்தி
      நலத்தை நமக்கிழைப்பாள்;
அல்லது நீங்கும்" என்றேயுல கேழும்
      அறைந்திடு வாய்முரசே
சொல்லத்தகுந்த பொருளன்று காண் இங்குச்
      சொல்லு மவர்தமையே
அல்லல் கெடுத்தம ரர்க்கினை யாக்கிடும்
     ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
3.நம்புவதேவழி என்ற மறைதன்னை
       நாமின்று நம்பிவிட்டோம்
   கும்பி ட்டேந நேரமும் "சக்தி" யென்றாலுனைக்
        கும்பிடுவேன் மனமே .
    அன்புக்குந தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
         அச்சமில்லாதபடி .
    உம்பர்க்கும் மிமபர்க்கும் வாழ்வு தரும்
          ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
5. வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
           ளாக விளங்கிடுவாய்!
     தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
            விண்ணப்பம் செய்துடுவேன் .
     எள்ளத் தனைபபோழு துமபய னின்றி
             யிராதென்றன் நாவினிலே
      வெள்ள மெனப்பொழி வாய்சக்தி , வேல்சக்தி,
             வேல்சக்தி வேல்சக்தி வேல்!
Note: 4th stanza omitted in the song

     





No comments:

Post a Comment