1.வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை
வேலவா! அங்கொர்
வெற்பு நொறிங்கிப் பொடிப்பொடி
யானது, வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு
வள்ளியைக் -கண்டு
சொக்கி மரமென நின்றனை தென்மலைக்
காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
பாதகன் - சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக் கிரையிட்ட
வேலவா!
பல்லினைக் காட்டி வெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை - ஒரு
பார்ப்பனக் கோலந தரித்துக் கரந தொட்ட
வேலவா!
2.வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
கடலினை - உடல்
வெம்பி மருகி சுருக்கிப் புகைய
வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும் பெயர்ச்
செல்வத்தை- என்றும்
கேடற்ற வாழ்வினை யின்ப விளக்கை
மருவினாய்
கொள்ளை கொண் டே அம ராவதி வாழ்வு
குலைத்தவன் - பானு
கோபன் தலை பத்துக் கோடித் துணுக்குறக்
கோபித்தாய்
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன்
மானைப்போல் - தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை மணங்
கொண்ட வேலவா!
3, ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப
மாகுதே - கையில்
அஞ்சலெ னுங்குறி கண்டு மகிழ்ச்சியுண்
டாகுதே.
நீறு படர்க்கொடும் பாவம் பிணிபசி
யாவையும் - இங்கு
நீக்கி யடியரை நித்தமுங் காத்திடும்
வேலவா!
கூறு படப்பல கோடி யவுணரின்
கூட்டத்தை- கண்டு
கொக்கரித் தண்டங் குலுங்க நகைதிடுஞ்
சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள் - எங்கள்
வைரவி பெற்ற பெருங்கன லே, வடி
வேலவா!
வேலவா! அங்கொர்
வெற்பு நொறிங்கிப் பொடிப்பொடி
யானது, வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு
வள்ளியைக் -கண்டு
சொக்கி மரமென நின்றனை தென்மலைக்
காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
பாதகன் - சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக் கிரையிட்ட
வேலவா!
பல்லினைக் காட்டி வெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை - ஒரு
பார்ப்பனக் கோலந தரித்துக் கரந தொட்ட
வேலவா!
2.வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
கடலினை - உடல்
வெம்பி மருகி சுருக்கிப் புகைய
வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும் பெயர்ச்
செல்வத்தை- என்றும்
கேடற்ற வாழ்வினை யின்ப விளக்கை
மருவினாய்
கொள்ளை கொண் டே அம ராவதி வாழ்வு
குலைத்தவன் - பானு
கோபன் தலை பத்துக் கோடித் துணுக்குறக்
கோபித்தாய்
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன்
மானைப்போல் - தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை மணங்
கொண்ட வேலவா!
3, ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப
மாகுதே - கையில்
அஞ்சலெ னுங்குறி கண்டு மகிழ்ச்சியுண்
டாகுதே.
நீறு படர்க்கொடும் பாவம் பிணிபசி
யாவையும் - இங்கு
நீக்கி யடியரை நித்தமுங் காத்திடும்
வேலவா!
கூறு படப்பல கோடி யவுணரின்
கூட்டத்தை- கண்டு
கொக்கரித் தண்டங் குலுங்க நகைதிடுஞ்
சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள் - எங்கள்
வைரவி பெற்ற பெருங்கன லே, வடி
வேலவா!
super song
ReplyDeleteI wish someone could translate this word by word and by expression.
ReplyDeleteI can do it without losing its beauty and aesthetic sense
Delete