Thursday, March 22, 2012

நெஞ்சி லுரமுமின்றி -nenjil uramuminri

1. நெஞ்சி லுரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வரரடி -கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி.
2.கூட்டத்தில் கூடிநின்று 
கூவிப் பிதற்றல்லன்றி
நாட்டத்திற் கொள்ளரடீ -கிளியே
நாளில் மறப்பாரடீ,
10.அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடி -கிளியே
ஊமைச் சனங்களடீ.
11.ஊக்கமும் உள்வலியும் 
உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் -கிளியே
வாழதகுதியுண்டோ
16. சொந்தச் சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை யிரன்காரடீ -கிளியே
செம்மை மறந்தாரடீ. 

Note: Other stanzas omitteed in the song












No comments:

Post a Comment