பல்லவி
பாருக்குள்ளே நல்ல நாடு -எங்கள்
பாரத நாடு
சரணங்கள்
1.ஞானத்தி லேபர மோனத்திலே உயர்
மானத்தி லே அன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லே யுயர் நாடு இந்தப் (பாரு)
2.தீரத்தி லேபடை வீரத்திலே -நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லே யுயர் நாடு இந்தப் (பாரு)
3.நன்மையி லேயுடல் வன்மையிலே -செல்வப்
பன்மையி லேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடு மாதர்தங் கற்பின்
புகழினி லே யுயர் நாடு இந்தப்(பாரு )
4.ஆக்கத்தி லே தொழி லூக்கதிலே -புய
வீக்கத்தி லேமறத் தன்மையிலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தஞ் சேனைத்
கடலினி லே யுயர் நாடு இந்தப்(பாரு )
5.வன்மையி லேயுளத் திண்மையிலே -மனத்
தன்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லே யுயர் நாடு இந்தப்(பாரு )
6.யாகத்தி லேதவ வேகத்திலே -தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினி லே யுயர் நாடு இந்தப்(பாரு)
7.ஆற்றினி லே சுனை யூற்றினிலே -தென்றல்
காற்றினி லேமலைப் போற்றினிலே
ஏற்றினி லேபய னீ ந் திடுங் காலி
யினத்தினி லே யுயர் நாடு இந்தப்(பாரு)
8.தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே -கனி
யீ ட்டத்தி லேபயி ரூட்டத்திலே
தோட்டத்தி லேயடங் காத நிதியின்
சிறப்பினி லே யுயர் நாடு இந்தப்(பாரு)
No comments:
Post a Comment