Tuesday, December 27, 2011

எந்தையும் தாயு மகிழ்ந்து குலாவி-enthaiyum thaym makizhinthu kulavi

எந்தையும் தாயு மகிழ்ந்து குலாவி
யிருந்தது மிந்நாடே - அதன் 
முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து 
முடிந்தது மிந்நாடே - அவர் 
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து 
சிறந்தது மிந்நாடே - இதை
வந்தனை கூறி மனதி லிருத்தியென்
வாயுற வாழ்த்தேனோ -இதை 


(பல்லவி)வந்தே மாதரம், வந்தே மாதரம் 
என்று வணங்கேனோ? 


இன்னுயுயிர் தந்தெமை யீன்று வளர்த்தரு
ளீந்தது மிந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்தது மிந்நாடே - அவர்
கண்ணிய ராகி நிலவினி லாடிக் 
களித்தது மின்னடே - தங்கள் 
பொன்னுட லின்புற நீர்விளை யாடியில் 
போந்தது மிந்நாடே -இதை 


(பல்லவி) வந்தே மாதரம், வந்தே மாதரம் 



என்று வணங்கேனோ? 
மங்கைய ராயவர் -ல்லற நன்கு 
வளர்த்தது மிந்நாடே -அவர்
தங்க மதலைக லீன்றமு தூட்டித் 

தழுவிய திந்நாடே -மக்கள் 
துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்தது மிந்நாடே -பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்தது மிந்நாடே - இதை


(பல்லவி))வந்தே மாதரம், வந்தே மாதரம் 
என்று வணங்கேனோ? 


தேடியுனைச் சரணடைந்தேன், தேசமுத்து மாரி!


தேடியுனைச் சரணடைந்தேன், தேசமுத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந தருவாய்.

பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்    
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந தீர்ப்பாய்

தேடியுனைச் சரணடைந்தேன், தேசமுத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந தருவாய்.

பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்    
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந தீர்ப்பாய்


எப்போழுதுங் கவலையிலே இணைந்கிநிற்பான் பாவி 
ஒப்பியுன் தேவல்செய்வேன் உனதருளால் வார்வேன்

சக்தியென்று நேரமெல்லந தமிழ்க்கவிதை பாடி,
பக்தியுடன் போற்றிநின்றால் பயமனைதுந தீரும்.  

ஆதாரம சக்தியென்றே அருமறைகள் கூறும்;
யாதானுந தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்.

துன்பமே யியர்கை எனும் சொல்லைமறந திடுவோம்
இன்பமே வேண்டிநிற்போம்; யாவுமவள் தருவாள்.

 நம்பினார் கெடுவதில்லை; நான்குமறைத் தீர்ப்பு; 
 அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்.


 


Friday, December 23, 2011

காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே - நீ


காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே - நீ 
கனியிலே -னிப்பதென்னே?கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே?கண்ண பெருமானே -நீ 
நோன்பிலே உயிர்ப்பதென்னே?கண்ண பெருமானே!

காற்றிலே குளிர்ந்த தென்னே? கண்ண பெருமானே -நீ 
கனலிலே சுடுவ தென்னே?கண்ண பெருமானே!
சேற்றிலே குழம்ப லென்னே?கண்ண பெருமானே-நீ 
திக்கிலே தெளிந்த தென்னே?கண்ண பெருமானே!

ஏற்றிநின்னைத் தொழுவதென்னே?கண்ணபெருமானே -நீ
எளியர்தம்மைக் காப்ப தென்னே?கண்ண பெருமானே!
போற்றினோரைக் காப்ப தென்னே?கண்ண பெருமானே!-நீ 
பொய்யர் தம்மை மாயப்ப தென்னே?கண்ண பெருமானே!

போற்றி!போற்றி!போற்றி![போற்றி! கண்ண பெருமானே!-நின்
பொன்னடிகள் போற்றி நின்றேன், கண்ண பெருமானே!

அன்னையை வேண்டுதல்

அன்னையை வேண்டுதல் 

எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லாவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெளிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவமெல்லாம் 
பரிதிமுன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு 
நசித்திடல் வேண்டும் அன்னாய்!

Thursday, December 22, 2011

அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே


அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே


இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக வெண்ணிநம்மைத் து 'றுசெய்த போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே  
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே

கச்சையணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ நியைந்தவேர் படைகள்வந்த போதினும்,அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே , 
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், 
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.  

Wednesday, December 21, 2011


 எல்லா மாகிக் 

எல்லா மாகிக் கலந்து நிறைந்தப்பின் 
ஏழைமை யுண்டோடா? -மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின் 
புத்தி; மயக்க முண்டோ? 


உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின் 
உள்ளங் குலைவ துண்டோ - மனமே!
வெள்ள மெனம்பொழி தண்ணரு ளாழ்ந்தபின் 
வேதனை யுண்டோ டா?


சித்தி நியல்பு மதன்பெருஞ் சக்தியின் செயகையநீ தேர்ந்துவிட்டால் -மனமே!
எதனை கோடி இடர்வந்து சூழினும் 
எண்ணஞ் சிறிதுமுண்டோ?

செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத் 
தேவ னுரைத் தன்னே; -மனமே!

பொய்கருதாம் லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சுவரோ?

ஆன்ம வொளிக்கடல் மூழ்கிக் திளைப்பவர்க் 
கச்ச முண்டோடா?- மனமே;

தேன்மடை யின்குத் திறந்து கண்டு 
தேக்கித் திரிவமடா!