Sunday, November 28, 2010

ஓடி விளையாடு பாப்பா - நீ - Odi vilayaadu paappaa




.








1.ஓடி விளையாடு பாப்பா, - நீ 
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா ,
கூடி விளையாடு பாப்பா, -ஒரு 
குழந்தையை வையாதே பாப்பா. 


2,சின்னஞ்சிறு சிருகுகுவி போலே - நீ 
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ 
மனத்தில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா 


3.கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக் 
கூட்டி விளையாடு பாப்பா 
எத்தித் திருடுமந்த காக்காய் -அதற் 
கிரக்கப்படவேணும் பாப்பா.


4.பாலைப் பொழிந்துதரும் பாப்பா-அந்தப் 
பசு நல்லதடி பாப்பா 
வாலைக் குழைந்துவரும் நாய்தான்-அது 
மனிதர்க்குத்  தோழனடி பாப்பா.


5.வண்டியிழுக்கும் நல்ல குதிரை -நெல்லு 
வாழி உழுதுவரும் மாடு, 
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு,-இவை 
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

6.காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு 
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு 
மாலை முழுதும் விளையாட்டு -என்று 
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா 


7.பொய் சொல்லக்கூடாது பாப்பா-என்றும் 
புறஞ் சொல்ல லாகாது பாப்பா, 
தெய்வம் நமக்குத்துணை பாப்பா-ஒரு 
தீங்கு வரமாட்டது பாப்பா.


8..பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம் 
பயம்கொள்ள லாகாது பாப்பா, 
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் 
முகத்தில் உமிழிந்துவிடு பாப்பா


9.துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம் 
சோர்ந்துவிடலாகாது பாப்பா,
அன்மிகுந்த் தெய்வமுண்டு-துன்பம் 
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா


10.சோம்பல் மிகக்கெடுதிபாப்பா-தாய் 
சொன்ன சொல்லைத் தட்டாதேபாப்பா 
தேம்பி யழுங் குழந்தை  நொண்டி,-நீ 
திடங்கொண்டு போராடு பாப்பா   


11.தமிழ்த்திருநாடு தன்னைப் பெற்ற-எங்கள் 
தாயென்று கும்பிடடி பாப்பா.
அமிழ்தில் இனியதடி பாப்பா,-நம் 
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா 


12.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே,-அதைத் 
தொழுது படித்திடடி பாப்பா,
செல்வம்நிறைந்த ஹிந்து ஸ்தானம் -அதைத் 
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.


13.வடக்கில் இமயமலை பாப்பா-தெற்கில் 
வாழுங் குமரி முனை பாப்பா.
கிடக்கும் பெரிய கடல் கண்டாய்-இதன் 
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.


14.வேத முடையதிந்த நாடு-நல்ல 
வீரர் பிறந்தநாடு.
சேதமில் லாத ஹிந்துஸ்தானம்-இதைத் 
தெய்வமென்று குமிடடி பாப்பா.


15.சாதிகள் இல்லையடி பாப்பா-குலத் 
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி,கல்வி-அன்பு  
நிறைய உடையோர்கள் மேலோர்.


16.உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் 
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது 
வாழும் முறைமையடி பாப்பா. 

A visitor from Madras is viewing this post frequently.Now I have posted the full text of the song and  one more video.

Friday, November 26, 2010

Bharathyi's patriotism-பாரதியின் தேசப்பற்று

பாரதியின் தேசப்பற்று
கவிஞர் ஷெல்ல யின்   இடையறாததனிமனிதத் தேடுதல். பாரதி தேசபக்தி பாடல்கள் எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்தது. அவர் எழுதிய உணர்ச்சிமிக்க தேசபக்தி பாடல்கள் தமிழ் மக்களின் கவனத்தை இடையறாது ஈர்த்தது.அவர் எழுதிய தேசபப்க்தி பாடல்கள் "ஸ்வதேச கீதங்கள்"(1908) மற்றும் "ஜன்ம பூமி" (1909) ஆகிய இரண்டு புத்தகங்களில் காணலாம்.இந்த இரண்டு புத்தகங்களையும் சகோதரி நிவேதிதாவிற்கு அர்பணித்துள்ளார்
Patriotic Poems : 
    Bharati who loved Shelley’s tireless search for individual liberty was influenced by him while writing patriotic poetry. He caught the breathless attention of the Tamil people with his powerful lyric, the bulk of which are to be found in ‘ Swadesa Gitangal ‘ (1908) and ‘ Janma Bhumi ‘ (1909). Significantly he dedicated both the books to Sisters Nivedita.
    

Wednesday, November 24, 2010

சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா-chinnanchirukilye kannamma





சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)
என்னைக்  கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு)

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே    
ஆடிவருந்  தேனே (சின்னஞ்சிறு)

ஓடி வருகையிலே- கண்ணம்மா!  
உள்ளம் குளிருதடீ; 
ஆடித்திரிதல்  கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி

உச்சிதனை முகந்தால்  - கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான் 
 கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
 உன்மத்த மாகுதடீ.

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில் 
 உத்திரங்  கொட்டுதடி; 
என் கண்ணில்  பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர்  நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!

Sinnanchirukiliye kannamma
Selvakkalanjiyame (chinnanchiru)
Ennai kali theerka ulagil etram puriya vanthaai (chinnanchiru)
Pillai kaniyamuthe kannamma pesum porchithirame 
Alli anaithidave enmel aadi varum thene (chinnamchiru)
Odi varukaiyile kannamma ullam kuliruthadi 
Aadi thirthal kandaal unnaippoi aavi tazhuthadi 
Uchithanai mukarnthal karuvam ongi valarithadi 
Mechi unnai urar pugazhnthaal meni silirkuthadi
Kannathil muthamittal ullamthaan kalveri kolluthadi
Unnai thazhividilo kannammaa unmathamaguthadi
Un kannil neer vazhindaal en nenjil uthiram kottuthadi 
En kannil paavayanro kannammaa

En uyir ninnathanro!  en uyir ninnathanro! en uyir ninnathanro!

Wednesday, November 10, 2010

Arivum nee-அறிவும் நீ, தருமம் நீ,உள்ளம் நீ,






அறிவும் நீ,
தருமம் நீ,
உள்ளம் நீ,
அதனிடை மருமம் நீ,
உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ,
தோளிடை வன்புநீ,
நெஞ்சகத்து அன்புநீ,
ஆலயம்தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெல்லாம், தேவி , இங்குனதே!  


Arivum nee,  
tharumam nee,
ullam nee,
athanidai marumam nee, 
udarkan vazhnthidum uyir நீ,
Tholidai vanbunee,
nenjakathu anbunee

Alayanthorum anipera vilankum
deivachilaiyellam, devi, ingunathe!

Friday, November 5, 2010

Ninnaiye rathienru ninaikkirenadi kannamma-நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா












பல்லவி  


நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சகியென்று சரண மெய்தினேன்
(
நின்னையே)

சரணங்கள் 

1.பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயற்
பின்னையே-நித்ய-
கன்னியே, 
கண்ணம்மா( நின்னையே)

2.மாரனம் புகலென் மீது வாரி வாரி வீசநீ (2)
கண் பாராயோ-வந்து சேராயோ,

கண்ணம்மா ( நின்னையே)

  3. யாவுமே சுகமுனிக்கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்
மே வுமேஇங்கு யாவுமே,கண்ணம்மா

(
நின்னையே)