Sunday, May 6, 2012

சிந்து நதியின் மிசை நிலவினிலே -Sindu nathiyin misai nilavinile

5.சிந்து நதியின் மிசை நிலவினிலே 
சேர நன் னாட்டிளம் பெ ண்களுடனே 
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் 
தோணிக ளோட்டி விளையாடிவருவோம் 

6.கங்கை நதிப் புறத்துக் கோதுமைப்பண்டம் 
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம் 
சிங்க மராட்டியர்தங் கவிதை கொண்டு 
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் 

3.சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் 
சேதுவை மேடுறுத்தி வீதிசமைப்போம் 
வங்கத்தி லோடிவரும் நீரின் மிகையால் 
மையத்து நாடுகளிற் பயிர்செய்குவோம் 

Note: These three stanzas find place in the song:    
பாரத தேசமென்று பேர் சொல்லு வார் "



No comments:

Post a Comment