மன்னு மிமயமலை யெங்கள்
1.மன்னு மிமயமலை யெங்கள் மலையே
மாநில மீதது போற்பிறி திலையே
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே
பன்னரு முபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூலித போலே!
பொன்னொளிர் பாரத் நாடெங்கள் நாடே
போற்றுவ மிஹ்தை யெமக்கில்லை யீடே
2.மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன்னாடு
நாரத கான் நலந்திகழ்நாடு
நல்லன யாவையு நாடு றுநாடு
பூரண ஞானம் பொலிந்த நன்னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாடு மிஹ்தை யெமக்கிளையீடே
3.இன்னல்வந் தூற்றிடும் போததற்கஞ்சோம்
ஏழையராகி யினிமண்ணிற் றுஞ்சோம்
தன்னலம் பேணி யிழிதொழில்புரியோம்
தாய்த்திரு நாடெனி லினிக்கையைவிரியோம்
கன்னலுந் தேனும் கனியுமின்பாலும்
கதலியும் செந்நெலும் நல்குமெக்காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஒதுவ மிஹ்தை யெமக்கிலையீடே
No comments:
Post a Comment