Sunday, May 6, 2012

சிந்து நதியின் மிசை நிலவினிலே -Sindu nathiyin misai nilavinile

5.சிந்து நதியின் மிசை நிலவினிலே 
சேர நன் னாட்டிளம் பெ ண்களுடனே 
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் 
தோணிக ளோட்டி விளையாடிவருவோம் 

6.கங்கை நதிப் புறத்துக் கோதுமைப்பண்டம் 
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம் 
சிங்க மராட்டியர்தங் கவிதை கொண்டு 
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் 

3.சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் 
சேதுவை மேடுறுத்தி வீதிசமைப்போம் 
வங்கத்தி லோடிவரும் நீரின் மிகையால் 
மையத்து நாடுகளிற் பயிர்செய்குவோம் 

Note: These three stanzas find place in the song:    
பாரத தேசமென்று பேர் சொல்லு வார் "



பாருக்குள்ளே நல்ல நாடு -எங்கள் -paarukulle nalla nadu engal bharatha nadu



  


பல்லவி 
பாருக்குள்ளே நல்ல நாடு -எங்கள் 
பாரத நாடு 
சரணங்கள் 
1.ஞானத்தி லேபர மோனத்திலே உயர் 
மானத்தி லே அன்ன தானத்திலே 
கானத்தி லேஅமு தாக நிறைந்த 
கவிதையி லே யுயர் நாடு இந்தப் (பாரு)

2.தீரத்தி லேபடை வீரத்திலே -நெஞ்சில் 
ஈரத்தி லேஉப காரத்திலே 
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு 
தருவதி லே யுயர் நாடு இந்தப் (பாரு)

3.நன்மையி லேயுடல்   வன்மையிலே -செல்வப் 
பன்மையி லேமறத் தன்மையிலே 
பொன்மயி லொத்திடு மாதர்தங் கற்பின் 
புகழினி லே யுயர் நாடு இந்தப்(பாரு )

4.ஆக்கத்தி லே தொழி லூக்கதிலே -புய 
வீக்கத்தி லேமறத் தன்மையிலே 
காக்கத் திறல்கொண்ட மல்லர்தஞ் சேனைத் 
கடலினி லே யுயர் நாடு இந்தப்(பாரு )

5.வன்மையி லேயுளத்  திண்மையிலே -மனத் 
தன்மையி லேமதி நுண்மையிலே 
உண்மையி லேதவ றாத புலவர் 
உணர்வினி லே யுயர் நாடு இந்தப்(பாரு )

6.யாகத்தி லேதவ வேகத்திலே -தனி 
யோகத்தி லேபல போகத்திலே 
ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினி லே யுயர் நாடு இந்தப்(பாரு) 

7.ஆற்றினி லே சுனை யூற்றினிலே -தென்றல் 
காற்றினி லேமலைப் போற்றினிலே
 ஏற்றினி லேபய னீ ந் திடுங் காலி 
யினத்தினி லே யுயர் நாடு இந்தப்(பாரு) 

8.தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே -கனி 
யீ ட்டத்தி லேபயி ரூட்டத்திலே 
தோட்டத்தி லேயடங் காத  நிதியின் 
சிறப்பினி லே யுயர் நாடு இந்தப்(பாரு)





    

.எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி -enthayum thaayum makizhnthu kulavi





1.எந்தையுந்  தாயு மகிழ்ந்து குலாவி 
     யிருந்தது மிந்நாடே -அதன் 
முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து 
    முடிந்தது மிந்நாடே -அவர் 
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து 
    சிறந்தது மிந்நாடே -இதை 
வந்தனை கூறி மனதி லிருத்தியென் 
     வாயுற வாழ்த்தேனோ -இதை 
வந்தே மாதரம், வந்தே மாதரம் 
     என்று வணங்கேனோ?

2.இன்னுயிர் தந்தெமை யீன்று வளர்த்தரு 
      ளீந்தது மிந்நாடே -எங்கள் 
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி 
    அறிந்தது மிந்நாடே -அவர் 
கன்னி யராகி நிலவினி லாடிக் 
     களித்தது மிந்நாடே -தங்கள் 
பொன்னுட லின்புற நீர்வினை யாடியில் 
    போந்தது மிந்நாடே -இதை 
வந்தே மாதரம், வந்தே மாதரம் 
     என்று வணங்கேனோ?

3.மங்கைய ராயவர் இல்லற நன்கு 
     வளர்த்தது மிந்நாடே -அவர் 

தங்க மதலைக்  ளீன்றமு தூட்டித் 
     தழுவி திந்நாடே -மக்கள் 
துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள் 
     சூழ்ந்தது மிந்நாடே -பின்னர் 
அங்கவர் மாய அவருடற் பூந்துகள் 
    ஆர்ந்தது மிந்நாடே -இதை 
வந்தே மாதரம்,வந்தே மாதரம் 
     என்று வணங்கேனோ?
Note: A visitor from Mountainview, California visited the video uploaded by me separately today-17/7/2012. I have uploaded the video with the song.




மன்னு மிமயமலை யெங்கள் மலையே -Mannumimayamalai yengal malaye

மன்னு மிமயமலை யெங்கள்


      1.மன்னு மிமயமலை யெங்கள் மலையே 
     மாநில மீதது போற்பிறி திலையே 
இன்னறு  நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
     இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே 
பன்னரு முபநிட நூலெங்கள் நூலே 
     பார்மிசை யேதொரு நூலித போலே!
பொன்னொளிர் பாரத் நாடெங்கள் நாடே 
     போற்றுவ மிஹ்தை யெமக்கில்லை யீடே 

2.மாரத வீரர் மலிந்தநன் னாடு 
      மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன்னாடு 
நாரத கான் நலந்திகழ்நாடு 
     நல்லன யாவையு நாடு றுநாடு  
பூரண ஞானம் பொலிந்த நன்னாடு 
     புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாடு மிஹ்தை யெமக்கிளையீடே 

3.இன்னல்வந் தூற்றிடும் போததற்கஞ்சோம் 
     ஏழையராகி யினிமண்ணிற் றுஞ்சோம் 
தன்னலம் பேணி யிழிதொழில்புரியோம் 
     தாய்த்திரு நாடெனி லினிக்கையைவிரியோம் 
கன்னலுந் தேனும் கனியுமின்பாலும் 
     கதலியும் செந்நெலும் நல்குமெக்காலும் 
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஒதுவ மிஹ்தை யெமக்கிலையீடே 

வருவாய் வருவாய் வருவாய் - கண்ணா -varuvai, varuvai, varuvai-kanna


பல்லவி 
வருவாய் வருவாய் வருவாய் - கண்ணா 
வருவாய் , வருவாய் வருவாய்.

சரணம் 
1.உருவாய் அறிவில் ஒளிர்வாய் -கண்ணா 
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் -கண்ணா 
கருவாய் என்னுள் வளர்வாய் -கண்ணா 
கமலத் திருவோ டினைவாய் -கண்ணா

2. இணைவாய் எனதா வியிலே - கண்ணா 
இதயத் தினிலே யமர்வாய் -கண்ணா 
கனைவா யசுரர் தலைகள் சிதறக் 
கடையூ ழியிலே படையோ டெழுவாய் -கண்ணா 

3.எழுவாய் கடல்மீ தனிலே -  எழுமோர் 
இரவிக் கினையா உள மீதினிலே 
தொழுவேன் சிவனாம் ச்நினையே -கண்ணா 
துணையே, அமரர் தொழும்வா னவனே!-கண்ணா