Showing posts with label bharathiyar-M.S.Subbulakshmi. Show all posts
Showing posts with label bharathiyar-M.S.Subbulakshmi. Show all posts

Tuesday, August 28, 2012

பாருக்குள்ளேநல்லநாடு-எங்கள்-Parukkulle nalla nadu-engal



பல்லவி 
பாருக்குள்ளே நல்ல நாடு -எங்கள் 
பாரத நாடு 
சரணங்கள் 
1.ஞானத்தி லேபர மோனத்திலே உயர் 
மானத்தி லே அன்ன தானத்திலே 
கானத்தி லேஅமு தாக நிறைந்த 
கவிதையி லே யுயர் நாடு இந்தப் (பாரு)

2.தீரத்தி லேபடை வீரத்திலே -நெஞ்சில் 
ஈரத்தி லேஉப காரத்திலே 
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு 
தருவதி லே யுயர் நாடு இந்தப் (பாரு)

3.நன்மையி லேயுடல்   வன்மையிலே -செல்வப் 
பன்மையி லேமறத் தன்மையிலே 
பொன்மயி லொத்திடு மாதர்தங் கற்பின் 
புகழினி லே யுயர் நாடு இந்தப்(பாரு )

4.ஆக்கத்தி லே தொழி லூக்கதிலே -புய 
வீக்கத்தி லேமறத் தன்மையிலே 
காக்கத் திறல்கொண்ட மல்லர்தஞ் சேனைத் 
கடலினி லே யுயர் நாடு இந்தப்(பாரு )

5.வன்மையி லேயுளத்  திண்மையிலே -மனத் 
தன்மையி லேமதி நுண்மையிலே 
உண்மையி லேதவ றாத புலவர் 
உணர்வினி லே யுயர் நாடு இந்தப்(பாரு )

6.யாகத்தி லேதவ வேகத்திலே -தனி 
யோகத்தி லேபல போகத்திலே 
ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினி லே யுயர் நாடு இந்தப்(பாரு) 

7.ஆற்றினி லே சுனை யூற்றினிலே -தென்றல் 
காற்றினி லேமலைப் போற்றினிலே
 ஏற்றினி லேபய னீ ந் திடுங் காலி 
யினத்தினி லே யுயர் நாடு இந்தப்(பாரு) 

8.தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே -கனி 
யீ ட்டத்தி லேபயி ரூட்டத்திலே 
தோட்டத்தி லேயடங் காத  நிதியின் 
சிறப்பினி லே யுயர் நாடு இந்தப்(பாரு)


Monday, July 16, 2012

வில்லினைஒத்த புருவம்வளைத்தனை-villinai othapuruvam valaithanai

வேலன் பாட்டு 


வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை;
வேலவா!-அங்கொர் 
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி 
யானது வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு
வல்லியைக்-கண்டு   
சொக்கி மரமென நின்றனை 
தென்மலைக் காட்டிலே 
கல்லினை ஒத்த வலிய மனங்கொண்ட 
பாதகன்-சிங்கன் 
கண்ணிரண் டாயிரங் காக்கைக் 
கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டி வெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை-ஒரு 
பார்ப்பனக் கோலந் தரித்துக் 
கரந்தொட்ட வேலவா!

வெள்ளலைக் கைகளைக் கொட்டிமுழ்ங்குங் 
கடலினை-உடல் 
வெம்பி மறுகிக் கருகிக் 
புகைய வெருட்டினாய்.  
கிள்ளை மொழிச்சிறு வள்ளி  யெனும்பெயர்ச் 
செல்வத்தை-என்றும் 
கேடற்ற வாழ்வினை-இன்ப 
விளக்கை மறுவினாய்.


கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு 
குலைத்தவன்-பானு 
கோபன் தலைபத்துக் கோடி  
துணுக்குறக்  கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன்  
மானைப்போல்-தினைத் 
தோட்டத்திலேயொரு பெண்ணை 
மனங்கொண்ட வேலவா! 


ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கினன்ப 
மாகுதே;-கையில் 
அஞ்சலெனுங்க்குறி கண்டு 
மகிழ்ச்சி யுன்டாகுதே,
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி 
யாவையும்-இங்கு 
நீக்கி அடியரை நித்தமுங் 
காத்திடும  வேலவா!
கூறு பலபலப் கோடி யவுணரின் 
கூட்டத்தைக்-கண்டு 

கொக்கரித் தண்டங் குலுங்க 
நகைத்திடுஞ் சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள்-எங்கள் 
விரவி பெற்ற பெருங்கன 
லே. வாடி வேலா!