Showing posts with label bharathiar. Show all posts
Showing posts with label bharathiar. Show all posts

Thursday, June 7, 2012

அச்சம் தவிர் - நய்யப் புடை- Acham Thavir-naayyap-pudai


அச்சம் தவிர்   -   நய்யப் புடை
மானம் போற்று  -  ரவுத்திரம் பழகு
ஆண்மை தவறேல்  -    தாழ்ந்து நடவேல்
சூரரை போற்று   -     தீயோர்க்கு அஞ்சேல்
ஓய்தல் ஒழி  -  நேர்பட பேசு
தாழ்ந்து நடவேல்  -  சாவதற்கு அஞ்சேல்
காலம் அழியேல் -   கீழோர்க்கு அஞ்சேல்
போர் தொழில் பழகு  -  தோல்வியில் கலங்கேல்
புதியன விரும்பு  -   வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு   -   உண்மைக்கு அஞ்சேல்
வெடிப்பற பேசு   -    நன்று கருது
வவ்வுதல் நீக்கு   -   தவத்தினை நிரப்பு நீ
கற்றது ஒழுகு   -   கைத்தொழில் போற்று
சேர்க்கை அழியேல்  -    பேய்களுக்கு அஞ்சேல்
ஞாயிறு போற்று   - மந்திரம் வலிமை
சவுரியம் தகுமே  - எல்லாம் மெய் செய்
நாள் எல்லாம் மெய் செய்

Friday, April 27, 2012

பகைவனுக் கருள்வாய்நன்னெஞ்சே -pakaivanukkarulvaai

பகைவனுக் கருள்வாய் -நன்னெஞ்சே  
பகைவனுக்கருள்வாய் 

1.புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே -நன்னெஞ்சே 
பூமியிற் கண்டோமே 
பகை நடுவினில் அன்புருவான நம் 
பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே 
பரமன் வாழ்கின்றான் (பகைவனுகருள்வாய்)

2.சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யரியாயோ - நன்னெஞ்சே 
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக் 
கொடிவள றாதோ? நன்னெஞ்சே (பகைவனுக்கருள்வாய்)

3.உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில் 
உள்ள நிறைவாமோ?-நன்னெஞ்சே 
தெள்ளிய தேனிலொர் சிறுது நஞ்சையும் 
சேர்த்தபின் தேனாமோ?நன்னெஞ்சே (பகைவனுக்கருள்வாய்)

4.வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது 
வாழ்வுக்கு நேராமோ?நன்னெஞ்சே 
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழி வானென்ற 
சாத்திரங் கேளாயோ?நன்னெஞ்சே (பகைவனுக்கருள்வாய்)

5.போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலுவந் தானுமவன் -நன்னெஞ்சே 
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொன்டு
நின்றதுங் கண்ண னன்றோ?-நன்னெஞ்சே (பகைவனுக்கருள்வாய்)

6.தின்ன வரும் புலி தன்னையு மன்பொடு 
சிந்தையிற் போற்றிடுவாய் -நன்னெஞ்சே 
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய் -நன்னெஞ்சே (பகவனுக்கருள்வாய்)



Tuesday, March 27, 2012

விட்டுவிடுதலை யாகிநிற்பா யிந்தச்-vittu viduthayahi nirpaa yinthach





பல்லவி 
விட்டுவிடுதலை யாகிநிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.
1,எட்டு திசையும் பறந்து திரிகுவை 
ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை 
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ் 
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)

2.பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்  
பீடையி லாததொர்  கூடுகட் டிக்கொண்டு 
முட்டை தருங்குஞ்சை  காத்து மகிழவைதி 
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)
3.முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும் 
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு 
மற்ற பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின் 
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு)


Wednesday, November 24, 2010

சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா-chinnanchirukilye kannamma





சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)
என்னைக்  கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு)

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே    
ஆடிவருந்  தேனே (சின்னஞ்சிறு)

ஓடி வருகையிலே- கண்ணம்மா!  
உள்ளம் குளிருதடீ; 
ஆடித்திரிதல்  கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி

உச்சிதனை முகந்தால்  - கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான் 
 கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
 உன்மத்த மாகுதடீ.

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில் 
 உத்திரங்  கொட்டுதடி; 
என் கண்ணில்  பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர்  நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!

Sinnanchirukiliye kannamma
Selvakkalanjiyame (chinnanchiru)
Ennai kali theerka ulagil etram puriya vanthaai (chinnanchiru)
Pillai kaniyamuthe kannamma pesum porchithirame 
Alli anaithidave enmel aadi varum thene (chinnamchiru)
Odi varukaiyile kannamma ullam kuliruthadi 
Aadi thirthal kandaal unnaippoi aavi tazhuthadi 
Uchithanai mukarnthal karuvam ongi valarithadi 
Mechi unnai urar pugazhnthaal meni silirkuthadi
Kannathil muthamittal ullamthaan kalveri kolluthadi
Unnai thazhividilo kannammaa unmathamaguthadi
Un kannil neer vazhindaal en nenjil uthiram kottuthadi 
En kannil paavayanro kannammaa

En uyir ninnathanro!  en uyir ninnathanro! en uyir ninnathanro!

Wednesday, November 10, 2010

Arivum nee-அறிவும் நீ, தருமம் நீ,உள்ளம் நீ,






அறிவும் நீ,
தருமம் நீ,
உள்ளம் நீ,
அதனிடை மருமம் நீ,
உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ,
தோளிடை வன்புநீ,
நெஞ்சகத்து அன்புநீ,
ஆலயம்தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெல்லாம், தேவி , இங்குனதே!  


Arivum nee,  
tharumam nee,
ullam nee,
athanidai marumam nee, 
udarkan vazhnthidum uyir நீ,
Tholidai vanbunee,
nenjakathu anbunee

Alayanthorum anipera vilankum
deivachilaiyellam, devi, ingunathe!

Saturday, October 23, 2010

சந்திர னொளியி லவளைக் கண்டேன்-Chandhiran oliyil avalaik kanden


சந்திர னொளியி லவளைக்   கண்டேன்,

பல்லவி


சந்திர னொளியி லவளைக்   கண்டேன்,
சரண மென்று புகுந்து கொண்டேன்;


அனுபல்லவி


இந்திரிய யங்களை வென்றுவிட்டேன்,
என தெனாசையை கொன்றுவிட்டேன்.1


சரணம் -1 


பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்;
துயரி லாதெனைச  செய்துவிட்டாள்'
துன்ப மெம்பதைக்  கொய்து விட்டாள்.


சரணம்-௨


மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தால்;
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்;
வான்க ணுள்ள வெளியச் செய்தாள் 
வழி நெஞ்சிற் களியச் செய்தாள்.  

குறிப்பு: இரண்டாவது சரணம் பாடப்படவில்லை Note: Saranam 2 is not sung.

Pallavi:
Chandhiran oliyil avalaik kanden
Saranammenru pughundu konden
Anupallavi
Indiriyankalai venruvitten endedensaiyaik-konruvitten
Chararam-1

Payanennamal uzhaikka chonnal
bakthiseidhu pizhaikka chonnal
thuyarilathenaich seithuvillal
thumbammenbathaik  koithu vittal
charanam-2
Meengal seiyum oliyaich seithal
Veesi nirkum valiyaich seithal
Vanganulla veiliyaich seithal

Vazhi Nenjirk kaliyaich seithal