பல்லவி
1 .வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள்
வீணை செய்யும் ஒலியி லிருப்பாள்
கொள்ளை யின்பங் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
அனுபல்லவி
1..உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தி னுண்ணின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள் (வெள்ளைத்)
சரணம் 1
மாதர் தீங்குரற் பாட்டி லிருப்பாள்
மக்கள் பேசும் மழலையி லுல்லாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியி னாவை இருப்பிடங் கொண்டாள்
சரணம் 2
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈத னைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள் (வெள்ளைத்)
குறிப்பு: இன்னும் ஏழு சரணங்கள் உள்ளது. அவைப் பாட்டில் இடம் பெறவில்லை
Subramani Bharathi composition Praise of Goddess Saraswathi
Lyrics: Pallavi
Vellai tamarai puvil iruppal
vinai seiyum oliyil iruppal
vinai seiyum oliyil iruppal
kollai inbam kulavu kavidai
koorum pavalar ullathilruppal
Anupallavi
ulladam porul thediyunarnde
odhum vedathin ulnintrin lolirval
kallamatra munivargal koorum
karunai vasagath thutporu laval (vellaith)
Charanam 1
madar teengurarar paatil iruppal
makkal pesum mazhalaiyil ullal
geedham padum kuyilin kuralaik
kiliyin navai iruppidum kondal
2. kodha ganra tozhiludaitagik
kulavu chittiram gopuram koyil
ida naittin ezhilidai yutral
inba mevadi vagidap petral