Showing posts with label Bharathiyar-Seerkazhi Govindarajan and others.. Show all posts
Showing posts with label Bharathiyar-Seerkazhi Govindarajan and others.. Show all posts

Sunday, November 28, 2010

ஓடி விளையாடு பாப்பா - நீ - Odi vilayaadu paappaa




.








1.ஓடி விளையாடு பாப்பா, - நீ 
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா ,
கூடி விளையாடு பாப்பா, -ஒரு 
குழந்தையை வையாதே பாப்பா. 


2,சின்னஞ்சிறு சிருகுகுவி போலே - நீ 
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ 
மனத்தில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா 


3.கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக் 
கூட்டி விளையாடு பாப்பா 
எத்தித் திருடுமந்த காக்காய் -அதற் 
கிரக்கப்படவேணும் பாப்பா.


4.பாலைப் பொழிந்துதரும் பாப்பா-அந்தப் 
பசு நல்லதடி பாப்பா 
வாலைக் குழைந்துவரும் நாய்தான்-அது 
மனிதர்க்குத்  தோழனடி பாப்பா.


5.வண்டியிழுக்கும் நல்ல குதிரை -நெல்லு 
வாழி உழுதுவரும் மாடு, 
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு,-இவை 
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

6.காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு 
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு 
மாலை முழுதும் விளையாட்டு -என்று 
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா 


7.பொய் சொல்லக்கூடாது பாப்பா-என்றும் 
புறஞ் சொல்ல லாகாது பாப்பா, 
தெய்வம் நமக்குத்துணை பாப்பா-ஒரு 
தீங்கு வரமாட்டது பாப்பா.


8..பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம் 
பயம்கொள்ள லாகாது பாப்பா, 
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் 
முகத்தில் உமிழிந்துவிடு பாப்பா


9.துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம் 
சோர்ந்துவிடலாகாது பாப்பா,
அன்மிகுந்த் தெய்வமுண்டு-துன்பம் 
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா


10.சோம்பல் மிகக்கெடுதிபாப்பா-தாய் 
சொன்ன சொல்லைத் தட்டாதேபாப்பா 
தேம்பி யழுங் குழந்தை  நொண்டி,-நீ 
திடங்கொண்டு போராடு பாப்பா   


11.தமிழ்த்திருநாடு தன்னைப் பெற்ற-எங்கள் 
தாயென்று கும்பிடடி பாப்பா.
அமிழ்தில் இனியதடி பாப்பா,-நம் 
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா 


12.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே,-அதைத் 
தொழுது படித்திடடி பாப்பா,
செல்வம்நிறைந்த ஹிந்து ஸ்தானம் -அதைத் 
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.


13.வடக்கில் இமயமலை பாப்பா-தெற்கில் 
வாழுங் குமரி முனை பாப்பா.
கிடக்கும் பெரிய கடல் கண்டாய்-இதன் 
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.


14.வேத முடையதிந்த நாடு-நல்ல 
வீரர் பிறந்தநாடு.
சேதமில் லாத ஹிந்துஸ்தானம்-இதைத் 
தெய்வமென்று குமிடடி பாப்பா.


15.சாதிகள் இல்லையடி பாப்பா-குலத் 
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி,கல்வி-அன்பு  
நிறைய உடையோர்கள் மேலோர்.


16.உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் 
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது 
வாழும் முறைமையடி பாப்பா. 

A visitor from Madras is viewing this post frequently.Now I have posted the full text of the song and  one more video.