காளிப் பாட்டு
1.யாதுமாகி நின்றாய் -காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மையெல்லாம்--காளி
தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்து மானாய் --காளி
பொறிக ளைந்து மானாய்
போதமாகி நின்றாய்-காளி
பொறியை விஞ்சி நின்றாய்.
2.-இன்பமாகிவிட்டாய்-காளி
என்னுள்ளே புகுந்தாய்
பின்பு நின்னையல்லால்-காளி
பிறிது நானுமுண்டோ?
அன்பளித்துவிட்டாய் -காளி
ஆண்மை தந்துவிட்டாய்
துன்ப நீக்கிவிட்டா ய் - காளி
தொல்லை போக்கிவிட்டாய்
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மையெல்லாம்--காளி
தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்து மானாய் --காளி
பொறிக ளைந்து மானாய்
போதமாகி நின்றாய்-காளி
பொறியை விஞ்சி நின்றாய்.
2.-இன்பமாகிவிட்டாய்-காளி
என்னுள்ளே புகுந்தாய்
பின்பு நின்னையல்லால்-காளி
பிறிது நானுமுண்டோ?
அன்பளித்துவிட்டாய் -காளி
ஆண்மை தந்துவிட்டாய்
துன்ப நீக்கிவிட்டா ய் - காளி
தொல்லை போக்கிவிட்டாய்

