Showing posts with label Bharathiyar-Dance. Show all posts
Showing posts with label Bharathiyar-Dance. Show all posts

Tuesday, August 28, 2012

பாருக்குள்ளே நல்ல நாடு -எங்கள்-Parukkulle nalla nadu-engal




பல்லவி 
பாருக்குள்ளே நல்ல நாடு -எங்கள் 
பாரத நாடு 

சரணங்கள் 
1.ஞானத்தி லேபர மோனத்திலே உயர் 
மானத்தி லே அன்ன தானத்திலே 
கானத்தி லேஅமு தாக நிறைந்த 
கவிதையி லே யுயர் நாடு இந்தப் (பாரு)

2.தீரத்தி லேபடை வீரத்திலே -நெஞ்சில் 
ஈரத்தி லேஉப காரத்திலே 
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு 
தருவதி லே யுயர் நாடு இந்தப் (பாரு)

3.நன்மையி லேயுடல்   வன்மையிலே -செல்வப் 
பன்மையி லேமறத் தன்மையிலே 
பொன்மயி லொத்திடு மாதர்தங் கற்பின் 
புகழினி லே யுயர் நாடு இந்தப்(பாரு )

4.ஆக்கத்தி லே தொழி லூக்கதிலே -புய 
வீக்கத்தி லேமறத் தன்மையிலே 
காக்கத் திறல்கொண்ட மல்லர்தஞ் சேனைத் 
கடலினி லே யுயர் நாடு இந்தப்(பாரு )

5.வன்மையி லேயுளத்  திண்மையிலே -மனத் 
தன்மையி லேமதி நுண்மையிலே 
உண்மையி லேதவ றாத புலவர் 
உணர்வினி லே யுயர் நாடு இந்தப்(பாரு )

6.யாகத்தி லேதவ வேகத்திலே -தனி 
யோகத்தி லேபல போகத்திலே 
ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினி லே யுயர் நாடு இந்தப்(பாரு) 

7.ஆற்றினி லே சுனை யூற்றினிலே -தென்றல் 
காற்றினி லேமலைப் போற்றினிலே
 ஏற்றினி லேபய னீ ந் திடுங் காலி 
யினத்தினி லே யுயர் நாடு இந்தப்(பாரு) 

8.தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே -கனி 
யீ ட்டத்தி லேபயி ரூட்டத்திலே 
தோட்டத்தி லேயடங் காத  நிதியின் 
சிறப்பினி லே யுயர் நாடு இந்தப்(பாரு)

Sunday, June 17, 2012

வாழ்கநிரந்தரம்வாழ்கதமிழ்மொழி-vaazhka nirantharam vaazka thamizmozhi

தான தனத்தன தான தனத்தன தான தனத்தன 



1.வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி 

வாழிய வாழிய வே.
2.வானமளந்த தனைத்து மளந்திடு 
வண்மொழி வாழிய வே 
3.ஏழ்கடல் வைப்பினுந் தன்ம ணம் வீசி 
யிசைகொண்டு வாழிய வே  

4.எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி 
என்றென்றும் வாழிய வே 
5.சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி யோங்கத் 
துலங்குக வையகமே 
6.தொல்லை வினைதரு தொல்லை யகன்று 
சுடர்க தமிழ்நா டே 
7.வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி 
வாழ்க தமிழ்மொழி யே 
8.வானம் அறிந்த தனைத்தும் அறிந்து 
வளர்மொழீ வாழிய வே