A face book reader of the blog:http://www.facebook.com/pages/Bharathiyar-Kavithaigal/147038055346774?sk=wall&filter=1
wanted to know the meaning of certain lines in this poem.Though I am not a tamil scholar I have given themeaning to the best of knowledge
பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு
தோயுமது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!1
வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீயெனக்கு, புது வயிர நானுனக்கு;
காணுமிடந தோறு நின்றன் கணணி னொளி வீசுதடீ
மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!2
வானமழை நீயெனக்கு,வண்ணமயில் நானுனக்கு;
பானமடி நீயெனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞானஒளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!3
வெண்ணிலவு நீயெனக்கு மேவு கடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீயெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணி யெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை!
நின் சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!4
எண்ணி யெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை!
நின் சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!4
காதலடி நீயெனக்கு காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீயெனக்கு விந்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே ! நல்லயுயிரே! கண்ணம்மா!5
வீசுகமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீயெ னக்கு, பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே!நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே! அள்ளுசுவையே கண்ணம்மா 6
நேசமுள்ள வான்சுடரே!நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே! அள்ளுசுவையே கண்ணம்மா 6
நல்லுயிர் நீயெனக்கு நா டியடி நானுனக்கு;
செல்வமடி நீயெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழ்கே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!7
தாரையடி நீயெனக்கு, தண்மதியம் நானுனக்கு:
வீரமடி நீயெனக்கு,வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா!8
1.தும்பி=தேனீ, கரும்பு சூறை=கொள்ளை
-
2.பூணும்=அணியும் வடம்=கயிறு,மாலை
புது வயிர நானுனக்கு=புது வாழ்வளிப்பவர்
You type புது வயிர நானுனக்கு and you get the meaning
3.பாண்டம்=பாத்திரம்
ஊனமறு =குறையற்ற
4.மேவு=fill up , நிரவு ; 2 . desire , love , விரும்பு ; 3 . make the ground even , level , சமனாக்கு ; ; 5 . join , combin
பண்ணு=செய் , படை , உருவாக்கு
சுதி=சுருதி ; 2 . an instrument accompaniment to an air .
5.போதமுற்ற=போதம்= ஸ்மரணை,ஞாபகம்,consciousness
நாதவடிவானவள்=நாதம்+வடிவு
நாதம்=குரல் உணர்ச்சி , நயம்
வடிவு=தோற்றம்
6.வீசு=தெளி
கமழ்= yield a fragrant smell
7.நல்லுயிர் நாடியடி= உயிர்நாடி=நீ உயிர் என்றால் நான் நாடி
8.தாரை=stream : தாரை, a star,கண்மணி(the pupil of the eye) , ,நீர்வீழ்ச்சி ,
நீர் ஊற்று ,a star , விண்மீன்
தண்மதி=நிலா (தண்மதி கண்ட ஆம்பலாகும் அவன் உள்ளம் ஆம்பல்= water-lily : ஆம்பல் , அல்லி
